Thursday, July 14, 2011

கல்வி "கதாநாயகன்' : இன்று காமராஜரின் 109 வது பிறந்தநாள்

தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.

கல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
பஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், ""ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.

யோசனையில் ஆழ்ந்த காமராஜர், ""கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.
தியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, ""பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.
காமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.

காமராஜ் இருந்தால் "காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது "ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,""காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்

Monday, April 11, 2011

மலிவு பிரசாரம் வேண்டுமா?

நான், சென்னை பச்சையப்பன் கல்லூரியில், 1953-66 ஆண்டில், இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு முறை, கல்லூரி தேர்வுக் கட்டணமான, 300 ரூபாயை என் பெற்றோரால் செலுத்த முடியவில்லை. அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜரிடம், இதைத் தெரிவித்தேன். உடனடியாக தனது உதவியாளர் வைரவன் மூலமாக, 300 ரூபாயை என்னிடம் தந்து, "உடனடியாக கல்லூரிக்கு சென்று பணத்தைக் கட்டு' என்றார்; நான் திகைத்து நின்றேன்.
"நீங்கள் உதவி செய்ததை பத்திரிகைகளுக்குத் தெரிவிக்கலாமா? முதல்வர், கல்லூரி மாணவனுக்கு உதவி' என்று செய்தி போடுவர்' என்று கேட்டேன். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. "இந்த 300 ரூபாயை உனக்குத் தந்ததை பேப்பரில் போட்டு மலிவு பிரசாரம் தேடிக்கொள்ள வேண்டுமா? போ... போய் ஒழுங்காகப் படித்து, உன் குடும்பத்தை காப்பாற்று' என்று அனுப்பினார் காமராஜர்.அவரது உதவியால் நானும் கல்லூரிப் படிப்பை முடித்து, அரசுப் பணியில் சேர்ந்து, உயர்ந்தேன். என்னைப் போல் அவரால் உதவி பெற்றவர்கள் பலர் உள்ளனர். அந்தச் செய்திகள் எல்லாம், எங்கும் பதிவாகவில்லை.- மணி.சுதந்திரக்குமார், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்,சூளை, சென்னை.

Monday, March 28, 2011

காமராஜரின் போராட்டங்களும்அனுபவித்த தண்டனைகளும்

விருதுநகர் மாவட்டத்தில், 1903ம் ஆண்டு பிறந்த காமராஜர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்பிலேயே நிறுத்திக்கொண்டார். துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர், முதல் உலகப் போரின்போது, பெரும் தலைவர்களின் பேச்சைக் கேட்டு முதன் முதலாக அரசியலில் ஈடுபட்டார். ஏராளமான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட காமராஜர், அதற்காக பல முறை சிறை தண்டனைகளையும் அனுபவித்துள்ளார்.
அவர் மேற்கொண்ட போராட்டங்களும், சிறை தண்டனைகளும்:
1920ல் ஒத்துழையாமை இயக்க போராட்டம்
1923ல் மதுரையில் கள்ளுக்கடை போராட்டம்
1930ல் உப்பு சத்தியாகிரகம் (இரண்டாண்டு சிறை)
1932ல் சட்ட மறுப்பு இயக்கம் (ஓராண்டு சிறை)
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (ஓராண்டு சிறை)
இவை மட்டுமின்றி, சுசீந்திரம் போராட்டம், வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட ஏராளமான மக்கள் போராட்டங்களிலும் காமராஜர் முக்கிய பங்கு வகித்தார்.

"நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை

மதுரையை விட சிறந்த நகரமைப்பு எங்கிருக்கிறது?
தமிழக மக்கள், ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும், கேரளாவில் உள்ள அய்யப்பனுக்கும் அதிக முக்கியத்துவம் தந்து வழிபட்டு வருவது, காமராஜருக்கு உறுத்தலாக இருந்தது. இந்த காரணத்தால், தமிழக அரசிற்கு வரும் வருமானம் பாதிக்கப்பட்டது தான் அதற்கு காரணம். திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானத்தை விட, பழனி முருகன் கோவில் வருமானம் பல மடங்கு குறைவாகவே, அப்போதும் இருந்து வந்தது.
ஓர் ஆன்மிகக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த போது, காமராஜர் தனது உள்ளக்கிடக்கையை இப்படி வெளிப்படுத்தினார்:தமிழக பக்தர்கள் மிக அதிகளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கை செலுத்துகின்றனர். நம்ம ஊரில் உள்ள ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு எந்த வகையிலும் குறைந்தது கிடையாதுன்னேன். உங்கள் காணிக்கையை ஸ்ரீரங்கம் உண்டியலில் போட்டால், அது தமிழகத்துக்கு பயன் தரும்.மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். அதனால், நம்ம சாமியும், பெரியசாமி தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு சொன்ன காமராஜரின் பேச்சில் உள்ள நியாயம், தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை புரிந்து கொண்ட ஆன்மிகவாதிகள், அதைப் பெரிதும் வரவேற்றனர்.அவரது அக்கறையை வெளிப்படுத்தும் இன்னொரு சம்பவமும் உண்டு.
காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், மேல்நாடுகளைப் போல் குட்டி நகரங்களை (சாட்டிலைட் சிட்டி) அமைக்க, நகர அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒரு குழுவினர் வெளிநாடு சென்று, அங்குள்ள நகரமைப்பு முறைகளை பார்த்து வரலாம் என முடிவானது. இதற்கு துறை அமைச் சரும் ஒப்புதல் கொடுத்துவிட்டார்.
அடுத்ததாய், முதல்வர் காமராஜர் ஒப்புதல் கொடுத்தால், விமானப் பயணம் போக அதிகாரிகள் தயாராய் இருந்தனர். இந்த நிலையில், ஒப்புதலுக்காக முதல்வர் காமராஜரிடம், கோப்பு சென்றது. அதைப் படித்துப் பார்த்தார் காமராஜர். "மக்கள் கொடுத்த வரிப் பணத்தில் இந்த உலகச் சுற்றுலா தேவை தானா' என்று அவருக்குள் கேள்வி எழுந்தது.இந்த சிந்தனையின் போது, அவரது மனதில் மதுரை நகரத்தின் வடிவமைப்பு தோன்றியது. மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சியம்மன் கோவில்; சுற்றிலும் தேரோடும் ரத வீதிகள்; அடுத்த சுற்றில் அளவெடுத்து வைத்தார் போல், நான்கு மாட வீதிகள்; அதற்கடுத்து வீதிகள்; இடையில் இவைகளை இணைக்கும் சாலைகள்.
"அந்தக் காலத்திலேயே, எவ்வளவு தொலைநோக்கோடு நம் முன்னோர் நகரை வடிவமைத்திருக்கின்றனர். இந்த அமைப்புக்கு மேல், நகரமைப்பு திட்டமிட என்ன இருக்கிறது' என்று நினைத்த காமராஜர், அதையே, கோப்பில் குறிப்பாக எழுதினார்."நகரமைப்புக்காக வெளிநாட்டு பயணம் தேவையில்லை. எக்காலத்திற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருக்கும், நம் மதுரை நகருக்குச் சென்று, ஆய்வு செய்து வாருங்கள்' என்று குறிப்பெழுதி, வெளிநாட்டு பயணத்துக்கு தடைபோட்டு, மக்கள் வரிப்பணத்தை காத்தார் காமராஜர்.

Sunday, March 27, 2011

"டாக்டர்' காமராஜர்

வேறு எந்த மாநிலமும் செய்யாத கல்விப் புரட்சியை தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராஜர் செய்ததால், நாடு முழுவதும் அவரது புகழ் பரவியிருந்தது. குஜராத் பல்கலைக்கழக பேரவை கூடி, கல்விப் புரட்சி செய்த காமராஜருக்கு டாக்டர் பட்டம் தர முடிவு செய்தது.இதை தெரிவிப்பதற்காக, பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் காமராஜரை சந்தித்தனர். அவர்களிடம் காமராஜர் பேசும் போது, "டாக்டர் பட்டமா... எனக்கா... நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவை எடுத்தீங்க... எனக்கு டாக்டர் பட்டமெல்லாம் வேண்டாம். நாட்டில் எத்தனையோ மேதாவிகள், விஞ்ஞானிகள் இருக்காங்க... அவங்களை தேடிப்பிடிச்சு, இந்தப் பட்டத்தை கொடுங்க. எனக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை, நான் ஒத்துக்க மாட்டேன்' என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்.ஹூம்... அது அந்த காலம்!

தினமலர் பதிவு செய்த நாள் : மார்ச் 28,

"கிங் மேக்கர்' காமராஜர் (1954 - 63)

பிறப்பு: 1905 ஜூலை 15
இறப்பு: அக்., 2, 1975
1976ல் பாரத ரத்னா விருதுஇயற்பெயர் காமாட்சி. செல்லப்பெயர் ராஜாசுதந்திர போராட்ட காலத்தில், 3,000 நாட்கள் சிறை வாசம்திருமண வாழ்வை விரும்பாதவர்.பிரகாசம், ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜாஜி போன்றோர் முதல்வராக காரணமாக இருந்தார்நேருவுக்கு பின் சாஸ்திரி, அவருக்குப் பின் இந்திரா பிரதமராக வருவதில் முக்கிய பங்காற்றினார். இதனாலேயே, "கிங் மேக்கர்' என போற்றப்பட்டார்.

கல்விக்கு முக்கியத்துவம்"கே' (காமராஜர்) பிளான்: மூத்த தலைவர்கள் பதவியில் இருந்தால் தான் செயலாற்ற முடியும் என்பது தவறு; அந்த எண்ணம் கூடாது. அமைச்சர்கள், பதவியைத் துறக்க வேண்டும். கட்சிப் பணியாற்ற வேண்டும். பதவியைத் துறப்பது என்றால் பொறுப்பை தட்டிக்கழிப்பது என்பது பொருளல்ல என்றவர் காமராஜர்றி1967ல் தி.மு.க.,விடம் தோற்றது குறித்து காமராஜர் கூறுகையில், "எதிர்ப்பு அலை பயங்கர வேகத்துடன் அடித்துள்ளது. அந்த வேகத்தில் கொள்கைக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள தராதரத்தை புரிந்துகொள்ளாமல் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்' என்றார்.காமராஜர் கூறுகையில், "தோத்துட்டோம்; நல்லாவே தோத்துட்டோம். ரஷ்ய மை மோசடி என வாய்க்கு வந்தபடி சொல்ல வேண்டாம்னேன்' என்றார் பெருந்தன்மையாக.

Thursday, March 24, 2011

முதல்வர் காரை நிறுத்திய போலீஸ்காரர்!


"ஐயா! இது முதல்வர் செல்லும்போது, போக்குவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னாள் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ராஜாஜி ஐயா எல்லாருடைய காலத்திலும் இருந்துவரும் சம்பிரதாயம்' என்றார் காவல்துறை அதிகாரி.

"இதுக்கு முன்னாலே இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் இருந்திருக்கலாம். எனக்கு இதெல்லாம் வேண்டாம்... சத்தம் போடாம, முன்னால போங்க' எனக் கூறிவிட்டு, அமைதியாய் தன் பயணத்தைத் துவக்கினார் காமராஜர். கார், கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் சாலை சந்திப்பை அடையும்போது, போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்த காவலர், காமராஜர் காரை நிறுத்தினார்.

காமராஜரின் காருக்கு முன்னால் நின்றிருந்த காவல் துறை அதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதைப் பற்றி கவலைப்படாமல், போக்குவரத்து சீரானதும், காமராஜரின் காரை புறப்பட அனுமதித்தார் அந்த காவலர்.

தன்னைத் தாண்டி கார் செல்லும்போது தான், காரில் செல்பவர் காமராஜர் என்பது அந்த காவலருக்கு புரிந்தது. "முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே. இனி என்னவாகுமோ' என நடுநடுங்கிப் போனார். அன்று மாலை காமராஜர் வீடு திரும்பும்போது, அவரது வீட்டின் முன், நடுங்கியபடியே காத்திருந்தார் அந்த காவலர்.

"முதல்வர் கார் என தெரியாமல் நிறுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என்று காவலர் கதற, "உங்க கடமையைத்தானே செய்தீங்க...' என்று அவரது தோளில் ஆதரவாய் தட்டி பாராட்டினார் காமராஜர். அதுமுதல், காமராஜரின் பயணத்தின்போது, பாதுகாப்புக்கு செல்லும் போலீஸ் வாகனங்கள், "சைரன்' ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை மக்களில் ஒருவராக கருதிய மாமனிதர்கள் வாழ்ந்த காலம்அது.

Monday, March 21, 2011

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே... எனக்கு 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால், நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட வயதில் முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போல ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறும் நிலையில் இருப்பவன், பொய் கூற வேண்டிய அவசியமில்லை.
""மூவேந்தர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளையர் என நம்மை பலர் ஆண்டிருந்தும், இன்றைய காமராஜ் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம், எப்போதும் ஏற்பட்டதில்லை. நம்மை ஆட்சி புரிந்தவர்கள் எல்லாம், கல்விக்கு என்று எதுவும் செய்யவில்லை.
""தோழர்களே... என் சொல்லை நம்புங்கள்... இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால், இன்னும் 10 ஆண்டுகளாவது, காமராஜை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்; அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராஜை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது!'(9.7.1961ல், தேவகோட்டையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், தற்போது ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள கழகங்களுக்கு, "பிதாமகனாக' இருக்கும் ஈ.வெ.ரா., பேசியது.)

Sunday, March 20, 2011

கட்சித் தலைவர்களை பற்றி கண்ணதாசன் கருத்து

கவிஞர் கண்ணதாசன் திரைப்படம், அரசியல் என அனைத்திலும் பிரபலமானவர். அவர் எழுதிய, "நான் பார்த்த அரசியல்' என்ற தலைப்பில், தமிழகத்தின் பிரபலமான அரசியல் தலைவர்கள் பற்றி விமர்சித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:ஈ.வெ.ராமசாமி: பெரியாரிடம் சலியாத உழைப்பிருந்தது. கொச்சையான பாஷை இருந்தது. பலர் சொல்லத் தயங்கிய விஷயங்களை அவர் சொன்னார். ஆனால், அவரைப் பொறுத்தவரை ஒரு சுயேச்சையான அபிப்பிராயக்காரராக மட்டும் இல்லாமல், மற்ற யாரையும் நம்புவதில்லை. "யாரும் யோக்கியர் இல்லை' என்று கூறியபடி சம்பாதிக்கின்ற ஒருவராகவே காட்சியளித்தார். கடைசி வரை அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
அண்ணாதுரை: அண்ணா மிகவும் உத்தமமானவர். தங்கமானவர். பழகுவதற்கு அவரை விட இனிமையானவர் கிடையாது. என் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் முதல் கண்ணீர் அவரின் கண்களில் இருந்து தான் வரும். அன்புக்கு உறைவிடம், அற்புதமான பேச்சாளர். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், மற்றவர்களை கட்டிமேய்க்கவும் இயலாதவராகவே அவர் விளங்கினார். அதனால் தான், "கட்டுப்பாடு' என்ற கோஷத்தோடு தி.மு.க., விளங்கிற்று. ஆகவே தான், அவரை மீறிக்கொண்டு கருணாநிதி உருவாக முடிந்தது.காமராஜர்: நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஒரே ஒரு சுபாவம் அவரிடம் காணப்பட்டது. இன்னொருவன் மேலேறி வரும்பொழுது, அவனை தலையில் தட்டி வைத்துக்கொண்டே இருப்பது தான் ராஜதந்திரம் என்பது. ஆனால், அதை என்னிடம் காட்டியதில்லை. மற்ற தலைவர்களோடு ஒப்பிடுகையில் அவர் உன்னதமானவர், உயர்ந்தவர்.
கருணாநிதி: கருணாநிதியை ஒரு தலைவராக பார்த்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, "பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு' என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்றுவரை இருந்து வருகிறார். வீட்டை மறந்து நாட்டுக்குப் பாடுபட்டவராக அவர் ஒரு காலத்திலேயும் வாழ்ந்ததில்லை.அரசியலிலும் சரி, சாதாரண காலங்களிலும் சரி, முக்கியமான நேரங்களிலும் சரி, தனக்கு, தனக்கு என்பதிலேயேதான் முக்கியமாக இருப்பார். அந்த நினைவுகள் தான் அவருக்கு இருக்கும். எழுத்தாளர் என்றால் தான் தான்; கலைஞர் என்றால் தான் தான்; நடிகன் என்றால் தான் தான்; தன் மகன் தான் என்று தன்னைச் சுற்றியே உலகத்தைக் கணித்தாரே தவிர, பிறருக்கும் அந்த திறமை உண்டு என அவர் ஒரு நாளும் மதித்தில்லை.

காமராஜருடன் ஒரு நாள்

காமராஜருடன் ஒரு நாள்:மறைந்த எழுத்தாளர் சாவி, "காமராஜருடன் ஒரு நாள்' கட்டுரையில் எழுதுகிறார்.இரண்டு மாதங்களுக்கு முன், காமராஜரை டில்லியில் சந்தித்தேன். அப்போது, முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராகவே வந்திருந்தார்.மெட்ராஸ் ஹவுசில் ரிசப்ஷன் ஆபீசர் தீனதயாளிடம் பேசியபோது, "இங்கே அவர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு, படுக்கப்போவதற்கு, மணி 12 ஆகிவிடும். அதற்கு மேல் அரை மணி, முக்கால் மணி நேரம் புத்தகம் படிப்பார். எவ்வளவு நேரமானாலும் படிக்காமல் மட்டும் உறங்குவதில்லை' என்றார்.
அவை என்ன புத்தகங்கள் என்பதை, எப்படியாவது தெரிந்துகொண்டு விடவேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. மறுநாள் காலை, காமராஜர் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். சோபாவில் சப்பணமிட்டு உட்கார்ந்து, பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.மேஜை மீது அன்றைய ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் - இவ்வளவு பத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "தங்களை, கூடவே இருந்து கவனிக்கப்போகிறேன். இது என்னுடைய நெடுநாளைய ஆசை' என்றேன்."ஓ! தாராளமாக இருங்களேன். இப்படி வந்து உட்காருங்க...' என்று கூறிவிட்டு, பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைத்தார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.
ஜான் கூன்தர் எழுதிய, "இன்சைடு ஆப்ரிக்கா,' ஆல்டவுஸ் ஹக்ஸ்லி எழுதிய, "எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்,' டைம் மேகசின், நியூஸ் வீக், வி.ச.காண்டேகரின், "சிந்தனைச் செல்வம்' ஆகிய புத்தகங்கள் இருந்தன. தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து, அதற்குரிய இடத்தில் கொண்டு போய் வைத்தார்."ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?'"இரண்டு மூன்று முறை குளிக்க வேண்டும். ஒவ்வொரு முறை குளித்து முடித்ததும், சலவை சட்டை போட்டுக்கொள்ள வேண்டும்' என்றார்."குளிர் காலத்தில் டில்லியிலிருக்கும்போது கம்பளி சட்டை, கோட்டு ஏதாவது போட்டுக் கொள்வதுண்டா?'"அதெல்லாம் ஒன்றும் கிடையாது. இப்போதுள்ளபடி தான். எப்பவாவது தேவையானால், சால்வை போட்டுக்கொள்வேன்!'"தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து காத்திருக்கிறார்களே... அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பர்?'"சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை, எளிய மக்கள் கேட்கிற உதவிகளெல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாயிருக்கும். முடிந்ததை நானும் செய்துவிடுவேன். படிச்சவங்க வந்து கேட்கிற காரியங்களில் தான் சிக்கலெல்லாம் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து, இப்படிச் செய்யலாமே என்று எனக்கு ஆலோசனை சொல்வாங்க... நான், "ஆகட்டும், பார்க்கலாம்' என்பேன்."யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். "நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க் வாங்கியுள்ள பையன் யாருக்காவது, "அட்மிஷன்' கொடுத்திருந்தால் சொல்' என்பேன். அப்படி இருக்காது, ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், "ஆமாம். நீ சொன்னது உண்மை தான்' என்று ஒப்புக்கொள்வேன். அவன் அதிலேயே திருப்பதி அடைந்து போய்விடுவான்!'- ஆனந்த விகடன் 1963.

Wednesday, March 16, 2011

காமராஜரின் திட்டமும் திடமும்!

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.

அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.

அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.

அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.

ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.

மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.

மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.

"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.

தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.

முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.

"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.

"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.

"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.

இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி குறிப்பிட்டுள்ளார் "சோ'.

Tuesday, March 15, 2011

மக்கள் வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா?

காமராஜ் தலைமையிலான அரசு, பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.,வில், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், அவர்களது வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருந்தது.




இதை உணர்ந்த கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முதல்வர் காமராஜிடம் பேசும்போது, "நாட்டு மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருகிறோம். ஆனால், மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சிகள் பக்கம் சென்று கொண்டிருக்கிறது. நமது சாதனைகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதில் நாம் பின்தங்கியுள்ளோம்' என்று சொன்னார்.




"அதற்கு என்ன செய்யலாம்' என, காமராஜ் கேட்டிருக்கிறார்.

"திரைப்படங்கள் மிக வலிமையான சாதனம். அதனால், நமது ஆட்சியின் சாதனைகளைத் தொகுத்து, ஒரு செய்திப்படமாக வெளியிட்டால், எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடையும்' என்று கவிஞர் கூறினார்.

"நாம் மக்களுக்கு செய்யற காரியத்தை, நாமே விளம்பரப்படுத்தணுமா?' என்று கேட்ட காமராஜ், "சரி... அதுக்கு எவ்வளவு செலவாகும்?' எனக் கேட்டார்.




"சுமாரா மூணு லட்ச ரூபாய்' என்று பதில் வந்தது.

"ஏயப்பா...! மக்கள் தந்த வரிப்பணத்தில் மூணு லட்ச ரூபாய் செலவு செஞ்சு நமக்கு விளம்பரம் தேடணுமா? அந்த மூணு லட்ச ரூபாய் இருந்தால், நான் மூணு பள்ளிக்கூடத்தை திறந்திடுவனே! அந்தப் படம் எல்லாம் வேணாம்' என்று சொல்லி அனுப்பி விட்டார் முதல்வர் காமராஜ்.

Monday, March 14, 2011

காமராஜர் – கக்கன் முதல் சந்திப்பு

25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.
நன்றி : ஆனந்த விகடன்.
”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத்தான் நான் முதன்முதலில் பெரியவரைப் பார்த்தேன்.
திரு.வெங்கடாசலபதி என்பவரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்கமாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, எதிரில் சற்றுத் தள்ளி, பெரியவரும் அவரோடு இரண்டு மூன்று பேரும் வந்துகொண்டு இருந்தார்கள்.

”இவர்தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்பர். காங்கிரஸ் ஊழியர்கள் எல்லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு புகழ்ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள். ஆகையால், அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது.
இப்போது பெரியவரே எதிரில் நடந்து வந்துகொண்டு இருக்கிறார். அவரிடம் வலியச் சென்று பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. மேலும் அவரோ, தன் சகாக்களுடன் எதையோ, தீவிரமாக விவாதித்துக்கொண்டு வந்தார். ‘அறிமுகத்துக்கு இது ஏற்ற தருணம் அல்ல’ என்று எண்ணி, பெரியவரை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே நடந்து சென்றுவிட்டேன்.
இது நடந்தபோது எனக்கு 27 வயது இருக்கும். 1936 என்று நினைக்கிறேன்… மதுரையில், சேவாலயம் ஹாஸ்டலில் அப்போது நான் வார்டனாக இருக்கி றேன். ஹரிஜன மாணவர்களுக்காக, ஹரிஜன சேவா சங்கம் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறது.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் காங்கிரஸ் கட்சியில் நாலணா மெம்பர். ஆனால், கட்சி வேலைகளில் ஈடுபட்டது இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படித்தேன். இங்கிலீஷில் ஒரே ஒரு மார்க் குறைந்ததால், ஃபெயில் ஆகிவிட்டேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால், இந்த ஹாஸ்டலுக்கு வார்டனாக வந்து சேர்ந்தேன்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, மேலூரில் இருந்த ஹாஸ்டலை பார்த்துக்கொள்ளச் சொல்லி என்னை அனுப்பினார்கள். அங்கே ஹாஸ்டல் வார்டனாக இருந்துகொண்டு, கட்சி வேலைகளிலும் ஈடுபட்டேன். அந்த தாலுக்கா காங்கிரஸ் கமிட்டிக்கு நான்தான் தலைவர்.
படிப்படியாக எனது கட்சி வேலைகள் அதிகரித்தன. பெரியவரும் அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தார். என்னைப்பற்றி அவரிடம் பலரும் கூறிஇருக்கிறார்கள். இருப்பினும், பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமலேயே இருந்தது.
1942 போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைக்குப் போய், ஒன்றரை வருஷம் ஜெயில்வாசம் முடித்துவிட்டு, மறுபடியும் மேலூருக்கு வந்து ஹாஸ்டல் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தச் சமயத்தில்தான் பெரியவருக்கும் – உயர்திரு ராஜாஜி அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரியவரோ ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஊழியராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியில் நானும் ஓர் ஊழியன். அதனால், ஓர் ஊழியரின் ஆதரவு, மற்றோர் ஊழியருக்குத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அசைக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது.
1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாடு நடந்தது. அந்தச் சமயத்தில்எல்லாம் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகிவிட்டேன். அந்த மகாநாட்டில்தான், நான் முதன்முதலில் பெரியவரைச் சந்தித்துப் பேசினேன். நண்பர் ஒருவர் என்னை பெரியவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
‘உங்களைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!’ என்றார் பெரியவர்.
‘உங்களை நெடு நாட்களாகவே சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது!’ என்று கூறிய நான், ‘என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியர்களுக்குத்தான் கிடைக்கும்!’ என்றேன்.
‘ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் வேற்றுமை பாராட்டிப் பேச வேண்டாம். நியாய உணர்ச்சியுடன் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, உறுதியுடன் பணிபுரியுங்கள்!’ என்று பெரியவர் ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
அந்த வார்த்தைகள் இன்னும் என் மனத்தில் பசுமையாக இருக்கின்றன. காரசாரமான விவாதங்களுக்கு மத்தியிலும் அவர் பொறுமையோடும் – நிதானத்தோடும் நடந்துகொண்டது இப்போதும்கூட என் மனக் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.
இதெல்லாம் நடந்து இன்று ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் சந்திப்பில் பெரியவர் எனக்கு ஓர் ஊழியராகத்தான் தோன்றினார். ஆனால், இன்று பாரதம் போற்றும் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக நான் அவரை மதித்துப் போற்றுகிறேன். ஆனால் பெரியவரோ, அன்றும் சரி – இன்றும் சரி, என்னைத் தமது சகாவாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
எங்களிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பு, சாதாரணமானதாக இருந்தாலும், எங்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பாசமும், மன நெருக்கமும் அசாதாரணமானதாகும். இனி, எத்தனை பிறவி எடுத்தாலும் இது தொடர்ந்து வர வேண்டும் என்றுதான் நான் பிரார்த்திக்கிறேன்!”

காமராஜ் மதிய உணவு திட்டம்

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தமிழ்நாட்டில் நடந்த கல்விப்புரட்சி
காமராஜர் "கல்வி வள்ளல்" என்றும்,  "கல்விக்கண் திறந்தவர்" என்றும் புகழப்படுவதற்குக் காரணம், 1956-ம் ஆண்டு அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டமாகும்.

1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு" நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடிவேலு அமர்ந்திருந்தார்.

தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்றுசுந்தரவடிவேலுவிடம் காமராஜர் விசாரித்தார்.

"தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார்.

மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

"தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும்.

பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.

அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும்.

இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடிகூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல.

தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்."

இவ்வாறு காமராஜர் கூறினார்.

அமைச்சரவை ஆலோசனை

மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார்.

முடிவில் சத்துணவுத் திட்டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன்முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறிய தாவது:-

"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்.

எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவுத் திட்டத்திற்கு பிச்சையெடுக்க சித்தமாக இருக்கிறேன்."

இவ்வாறு காமராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

 
1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது15 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்.

பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி, அதன் மூலம் ரூ.6 கோடி வசூலிக்கப்பட்டது. இந்தப் பணத்தைக் கொண்டு, மாணவர்களுக்கு கரும்பலகை, சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.

மதிய உணவுத் திட்டத்துடன் காமராஜர் நிற்கவில்லை. கிராமம் தோறும் பள்ளிகள் தொடங்கினார். பள்ளிக்கூடம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

1954-ல் இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 21 ஆயிரம். இது 1962-ல் 30 ஆயிரமாக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தில் இருந்து 42 லட்சமாக உயர்ந்தது.

இதேபோல் 1954-ல் இருந்த உயர்நிலைப்பள்ளிகள் 2,012. இது 1964-ல் 2,163 ஆக உயர்ந்தது. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரத்தில் இருந்து 10 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்தது.

இலவச கல்வி

எஸ்.எஸ்.எல்.சி. வரை இலவசக் கல்வித் திட்டத்தை 1960-ல் காமராஜர் கொண்டு வந்தார்.

ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,200-க்கு குறைவாக வருமானம் உள்ள குடும்பத்தின் மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. இந்த வருமான உச்ச வரம்பு பின்னர் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது.

1962-ம் ஆண்டில், "வருமான உச்ச வரம்பு இன்றி எல்லோருக்கும் இலவசக் கல்வி" என்று காமராஜர் அறிவித்தார்.

1963-ம் ஆண்டு, அரசாங்கத்தின் ஒரு ஆண்டு மொத்த செலவே ரூ.127 கோடியே 19 லட்சம்தான். அதில் கல்விக்கு ரூ.27 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டது.

காமராஜர் செய்த தவறு என்ன தெரியுமா?

சத்தியமூர்த்தி என்பவர் காமராஜருக்கு அரசியல் குருவாக இருந்தவராம்.

சத்தியமூர்த்தியின் மனைவியிடம், "எனக்கு காமராஜர் ஒரே பையன். அவன் திருமணம்
செய்யாமல் இருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவனை திருமணக் கோலத்தில்
பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. அவனிடம் இதை எடுத்து சொல்லி
திருமணத்துக்கு சம்மதிக்க செய்யுங்கள்'' என்று காமராஜரின் தாயார் கூறினாராம்.

குருநாதரின் மனைவியும் காமராஜரிடம் இந்த செய்தியை சொல்லியிருக்கிறார். காமராஜர்
எந்த பதிலும் சொல்லாமல் சென்றிருக்கிறார்.
அன்று மட்டும் காமராஜர் "சரி" என்று சொல்லி ஒரே ஒரு கல்யாணம் செய்திருந்தால்
இந்த நாடு இப்படி சீர்கெட்டுப் போயிருக்குமா?.

"கிங் மேக்கரா"யிருந்தவருக்கு "பிரின்ஸ்மேக்கரா"ய் இருப்பது கஷ்டமான காரியமா?

ஒரு பிள்ளை விஜயநகர அரசை உருவாக்க... சோழப்பேரரசை மற்றுமொரு பிள்ளை
கவனித்துக்கொள்ள... சேரப்பேரரசில் அண்ணனோ தம்பியோ கோலோச்ச... எவ்வளவு ஆனந்தமாக
தமிழ்நாடு இருந்திருக்கும்!
தென்னிந்தியா முழுவதும் தமிழன்னையின் குரல் எதிரொலித்திருக்காதா? இந்தி அரக்கி
எட்டிப்பார்த்திருப்பாளா இங்கே?
அண்ணன் தம்பிகள் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்திருந்தால்
முல்லைப்பெரியாறும், காவிரியும், கிருஷ்ணாவும் இப்படி தண்ணீர்ச்சுழலில்
சிக்கித் தத்தளிக்குமா?
ஒற்றைக் கையெழுத்தில் தீர்ந்துபோயிருக்காதா தொல்லைகள்?

தவறு செய்துவிட்டார் காமராஜர்.
படிக்காத தற்குறியாக இருந்திருக்கிறார் காமராஜர்.
டெல்லியில் "ஆர் யூ ரெடி?" என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு காமராஜர்," நான்
ரெட்டி இல்லை. நாடார்" என்றிருக்கிறார்.
ஒரு பேரனோ பேத்தியோ இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டிருக்குமா?
பேரனை ரேடியோ மந்திரியாக்கியிருக்கலாம். டெல்லி ஆங்கில வெறியர்களிடமிருந்து
காமராஜர் தாத்தாவை பேரன் கேடயமாக இருந்து காப்பாற்றியிருக்க மாட்டாரா?

அன்னையின் பேச்சைக்கேட்டு ஒரு திருமணமாவது அவர் செய்துகொண்டிருக்கவேண்டும்.

தவறு செய்துவிட்டார் காமராஜர்.

பிள்ளைகள் இருந்து காங்கிரஸ் கட்சியை பரிபாலனம் செய்து வந்திருந்தால் இப்படி
கதம்பக் கட்சியாகப்போயிருக்குமா காங்கிரஸ்?

கண்ணதாசன் என்று ஒரு கவிஞர். காமராஜருக்கு கொடுத்த சர்ட்டிபிகேட்டைப்பாருங்கள்.
எதிலுமே திறமையில்லாதவராக இருந்திருக்கிறார் பாருங்கள்...

சொத்து சுகம் நாடார்
சுகம்தன்னை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தன்னைப்பெற்ற அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடு ஒன்றே நாடி தன்னலம் ஒன்றும்
நாடாத நாடார்.

 இப்படியெல்லாம்கூட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

எல்லாம் தமிழ்நாட்டின் தலையெழுத்து!

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியமாதிரி பத்திரிக்கைகளில் அண்மையில் ஒரு செய்தி.

"காமராஜர் பேத்திக்கு மருத்துவ செலவிற்காக தமிழக அரசு உதவிசெய்திருக்கிறது."

தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களிலேயே மருத்துவ உதவிக்கு அரசாங்க
உதவியைப்பெற்றவர் காமராஜரின் பேத்தியாகத்தான் இருக்கும்.

தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு!

இந்த பத்திரிக்கைகளுக்காகட்டும்! ...கொஞ்சம்கூட சாமர்த்தியம் போதாது.
இந்தச்செய்தியை கட்டம் கட்டியா போடுவது?

போகட்டும்...இந்தப்பத்திரிக்கைகள் எல்லாம் அற்பமானவை. கொசுவிற்குச் சமமானவை அவை
!

கொசுக்களுக்கு என்ன தெரியும்? மாட்டின் பால் மடியில் போய் உட்கார்ந்து
பாலைக்குடிக்கத்தெரியுமா
அவைகளுக்கு?
இரத்தத்தையல்லவா குடிக்கும் அந்த ஏமாளிக்கொசுக்கள்!

காமராஜரின் சொற்பொழிவுகள்

காமராஜரின் சொற்பொழிவுகள்

சொல்லும் செயலும்
கும்பகோணத்தில்
திரு. கே. காமராஜ் அவர்கள் ஆற்றிய உரை:-

நம்முடைய நாடு ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட நாடு. ஜனநாயக நாட்டிலே மாறுபட்ட கருத்துள்ள அரசியல் கட்சிகள் பல இருப்பது இயற்கை. கட்சி இருக்க வேண்டும் என்பதற்காக கண்டதை உளறக்கூடாது. ஜனநாய்த்திலே சட்டத்திலே பேச்சுரிமை கொடுத்திருக்கிறது. அதனால், நானு உளற வேண்டுமென்று சொன்னால் நியாயமா என்ன? அரசியல் கட்சிகளும், சட்டத்திலே உரிமை இருந்தாலும் ஒரு வரையறை தங்களுக்குள் பண்ணுகிற பழக்கம் இப்போது ந்ம் நாட்டிலே இல்லை. கொஞ்ச நாள் கழித்து வரலாம். பொதுவாக அரசியல் கட்சிகள் பேச்சு உரிமையாயும் எழுத்து உரிமையையும் நல்ல முறையிலே பயன்படுத்த வேண்டும். எழுத்து உரிமை கொடுத்து இருக்கிறது. அபற்காக யாரைப்பற்றியும் கன்னாபின்னாவென்று எழுதலாமா? பேச்சு உரிமை கொடுத்திருக்கிறது என்றால், என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்ன? பேசுவதற்கு வரையறை இருக்க வேண்டுமென்று நான் சொல்கிறேன்.

ஏதோ மந்திரியைத்தான் கன்னாபின்னான்னு பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள். எங்களுக்குத்தான் வேலை ஒண்ணும் இல்லை, கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களை சும்மா விடுகிறீர்களா? யாரையும் வெளுத்து வாங்கிவிடுகிறீர்கள். அதே மாதிரிதான் பத்திரிகைகளும். ஏதோ அரசாங்கத்தை நடத்துகிறோம். எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்ல்லாம். கேட்டுக்கொள்கிறோம். ஆபாசமாக எழுதுகிறீர்கள். சும்மாயிருக்கிறோம். தனிப்பட்டவர்களைக்கூடவா ஆபாசமாக எழுதுகிறது? என்னவோ எழுதுகிறார்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல். அவர்கள் மேல் குற்றம் சொல்ல வேண்டுமென்று சொல்லவில்லை. அதை நீங்களும் வாங்கிப் படிக்கிறீர்கள். உங்களுக்கு அது மாதிரி விஷயம் போட்டால்தான் படிக்கிறீர்கள் அதனால், எழுதுகிறவனும் அப்படி எழுதுகிறான். உங்களுக்குப் புத்தி சொல்லவோ நமக்கு நல்ல உபதேசம் பண்ணவோ நம் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டுமென்றோ இருந்த அந்தக் காலம் எல்லாம் போச்சு. பத்திரிகையிலே எப்பொழுதுமே நாட்டுக்கு நல்ல தொண்டு செய்யவேண்டும் என்ற காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வியாபாரம் செய்யவேண்டும் என்பதினால் கன்னாபின்னாவென்று எழுதுகிறார்கள். அப்படித்தான் படமும் போடுகிறார்கள்.
பத்திரிகைளின் பொம்மைப் படம்
நீங்கள் கூட பத்திரிகையிலே பார்க்கலாமே. யாரையோ படம் போடுகிறார்கள். ஒரு நாளைக்குக் குரங்கு. ஒரு நாளைக்கு ராமர் படம். ஒரு நாளைக்கு யானை படம் போடுகிறார்கள். ஏதாவது போட வேண்டும். அப்படிப் போட்டால்தான் பத்திரிகை விற்கும். என்னைக்கூட பொம்மைப் படம் போடுகிறார்கள். நான் ஒன்றும் கோப்ப்படுவதில்லை. நான் இதைச் சொன்னவுடனே நீங்கள் எல்லாம் சிரிக்கிறீர்கள் இல்லையா. (சிரிப்பு) அதே மாதிரி நானும் அதைப் பார்த்துச் சிரிப்பேன். ஏன் சிரிக்கிறேன்? பைத்தியம், இப்படிப் படம் போடுகிறார்களே என்று நான் சிரிக்கிறேன். பத்திரிகையிலே படம் போடுகிற வழக்கம் உண்டு. அதனாலே ஆபாசமாகப் போடுகிறதா என்ன? வேடிக்கைக்கு தமாஷ் படம் போடுறான் என்று சொன்னால் ஆபாசமாகவா போடுகிறது? பிறர் மனத்தைப் புண்படுத்துகிற மாதிரி படம் போடுவது எழுதுவது இவை எல்லாம் ரொம்பநாளைக்கு நடக்காது. கொஞ்ச நாளைக்கு நடக்கும். அப்புறம் எல்லோருக்கும் தெரிந்துபோகும், இதிலெல்லாம் ஒன்றும் இல்லை என்று. அதற்காக நாம் அதிகமாக்க் கவலைப்பட வேட்டியதில்லை.
கொள்கையிலே சத்து இருந்தால்தானே!
ஆனால், ஜனநாய் ஆட்சியிலே அரசியல் கட்சிக்கார்ர்கள் அவரவர்கள் கொள்கையைச் சொல்ல வேண்டும். அதுதான் முக்கியம். இப்போது நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னுடைய கொள்கை என்ன? அதைச் சொல்லுகிறேன். மற்ற கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி, அவன் கொள்கையை என்ன என்று சொல்லட்டும். சுதந்திரா கட்சி, அவன் கொள்கையைச் சொல்லட்டும். திராவிட முன்னேற்றக் கழகம், அவன் கொள்கையைச் சொல்லட்டும். ஆனால், கொள்கைக்குப் பக்கத்திலேயே அவர்கள் போக மாட்டேன் என்கிறார்களே காரணம் என்ன? அவர்கள் கொள்கையிலே சத்து இருக்கிறது? அதைச் சொல்ல முடியாது. அவன் கொள்கையைச் சொல்லாமல் கன்னாபின்னாவென்று என்னவோ சொல்லுகிறான். அது மொத்தத்திலே நல்ல முறையில்லை. நம்முடைய ஜனநாயகப் பண்பு வளரவேண்டும் என்று சொன்னால் திடீர் என்று எப்படி முடியும். இங்கிலாந்திலே நூற்றுக்கணக்கான வருஷங்களாக அதை வளர்த்து வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடனே அதைப்போல நடக்க முடியுமா? அமெரிக்காவைப் பார்த்தவுடனே அமெரிக்காவைப்போல வள முடியுமா? பிரிட்டிஷ் ராஜ்யத்தைப் பார்த்தவுடனே அது போல் இருக்கமுடியுமா என்ன? தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் தவிர மற்றவர்களைத்தான் அவன் பார்க்கிறான்.
சுயராஜ்யம் வந்து 14 வருஷங்கள் ஆகிவிட்டதே. பட்டினியைத்தீர்த்து விட்டாயா? பஞ்சத்தை ஒழித்து விட்டாயா? என்று கேட்கிறார்கள். அமெரிக்காவைப் பார்த்தாயா? ரஷ்யாவைப் பார்த்தாயா? என்றும் கேட்கிறார்கள் அங்கெல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? அங்கே பார்த்துப் பயன் என்ன? நம் ஊரையே கார்த்தால் போதும். இங்கே சோறு இல்லை, வீடு இல்லை. வேலை இல்லை, படிப்பு இல்லை. அதைத்தானே பார்க்கவேண்டும். இந்த ஊரிலே வேலை இல்லாதவர்களுக்கும், படிப்பு இல்லாதவர்களுக்கும், என்ன பண்ண வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதற்கு வேண்டிய பிரயத்தனம் நாம் பண்டவேண்டுமே தவிர, வேறு நாட்டைப் பார்த்து என்ன எண்ட இருக்கிறது? வேற்று நாட்டின் சில அனுபவங்கள் நமக்குத் தெரியவேண்டும். அந்த நாட்டுக்கு சுயராஜ்யம் வருவதற்கு முன்னாலே அவர்கள் சொந்த அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முன்னாலே அவர்கள் பட்ட கஷ்டங்கள், சிரமங்கள், அவர்கள் எப்படி முன்னேற்றம் அடைந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்கள் அடைந்த முன்னேற்றங்களையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படி கொள்கையிலே தவக்கம் ஏற்பட்டது? அவர்களுக்கு முட்டுக்கட்டை எங்கேயெல்லாம் இருந்தது? என்பதையெல்லாம் பார்த்து நம் எதிரே உள்ள முட்டுக்கட்டையைத் தூக்கி எறிய வேண்டும். பாடுபட்ட அந்த நாட்டுன் கொள்கைகளை வைத்துக் கொண்டு நம் நாட்டுக்குத் தகுந்த முறையிலே ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு நம்முடைய நாட்டை முன்னேற்றப் பாதையிலே போவதற்கு முயற்சி எடுத்துக் கொள்பவர்கள் பின்னாலே திரும்பிப் பார்த்தால் அதற்கே நேரம் சரியாகப் போகும். நம் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரியத்திலேயே கண்ணாக இருக்க வேண்டும். மற்றெல்லாவற்றையும் மறக்காமல் இருக்க வேண்டும்.
இயற்கை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம்
நம் நாடு என்று சொன்னால்-நம் தேசம் என்று சொன்னால் வெறும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் கொண்டது மட்டும் நாடு இல்லை. கோவில்களும் கோபுரங்களும் அவைகளைக் கட்டிமுடித்த மக்களும் கொண்டதுதான் நம் நாடு. இந்த நாட்டுக்குச் சிறப்பு யார்? நம் மக்கள்தானே. வெறும் மரங்களும் மலைகளும் இருந்து மக்களே இல்லாத நாடு என்னவாகும்? நாட்டு மக்களை மறந்து விட்டு வெறும் இயற்கை அழகை மட்டும் பாடிக்கொண்டேயிருப்பார்கள் கவிஞர்கள். கவிஞர்களைக் கேட்டால் என்ன பாடுவார்கள்? காவிரியினுடைய வளத்தைப் பற்றியும் அதன் அழகைப் பற்றியும் பொன்னியின் தண்ணீர் வளத்திலே நாம் வாழ்வதைப் பற்றியும் கவி பாடு என்று சொன்னால் பாடிக்குவித்து விடுவார்கள். வேண்டியதுதான். இயற்கையினுடைய அழகைப் பாடவேண்டியதும் அவசியந்தான். அத்துடன் ஏழையின் கஷ்டத்தையும் பாட வேண்டும். இயற்கையினுடைய வளத்தையும் ஏழையையும் ஒன்றாக்ப் பண்ண வேண்டும். காவேரி ஓடுகிறது. தண்ணீர் வந்தால்தானே சாப்பாட்டுக்குவழி. அதனால், ஆறு வெட்ட வேண்டும். தண்ணீர் வரும்பொழுது அதைத் தேக்கி வைக்கவேண்டும். ஏதோ அணையைப் போட்டோம். வாய்க்கால் கட்டினோம். தண்ணீர் வந்தது. நெல் போட்டோம் சாப்பிடுகிறோம். அதனால், சந்தோஷம்தான். அது மாதிரி இயற்கை நமக்கு அளித்த அத்தனை வசதியையும் பயன்படுத்தவில்லையா என்ன? பயன்படுத்தத் தவறிவிட்டோம். எப்பொழுது தவறினோம். பழைய காலத்திலே அணை இருந்தது, சோர் காலத்திலே காவிரியிலே கல்லணை கட்டி வைத்தார்கள். அதனால்தான் அபற்கு கல்லணை என்று பெயர் வந்தது. பழைய ராஹாக்கள் காலத்திலேதான் கல்லணை கட்டப் பட்டது. இடைக்காலத்திலேதான் இதெல்லாம் விட்டுப் போய் விட்டது. நமக்குச் சொந்த அரசாங்கம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தோம். யார் இருந்தாலும் தெரியாது. ஒரே தடுமாற்றம். எங்கு போனாலும் தடுமாற்றம். இந்த தடுமாற்றம் ஒரு காலத்தில். அதற்குப் பிறகு அன்னிய அரசாங்கம் 150 ஆண்டுகள் இருந்தது. அந்த இடைக் காலத்தில்தான் நம் முன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விட்டது. இந்த 200-300 ஆண்டுகளில் உலகமே வெகு வேகமாக முன்னேறி விட்டது. உலகத்திலே ரயில், மின்சாரம், யந்திரங்கள் முதலியன விஞ்ஞான வளர்ச்சியில் இப்படித்தான் ஏற்பட்டது. இது 200 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது. அந்த காலத்தில் நமக்குச் சொந்த அரசாங்கம் இல்லை. அந்தக் காலத்தில் எதற்குச் சொந்த அரசாங்கம் இருந்ததோ அந்த தேசம் எல்லாம் முன்னேறி விட்டது. சொந்த அரசாங்கம் இல்லாத தேசம் எல்லாம் பின் தங்கி விட்டது பின் தங்கிய நாடு என்று சொல்லுகிறோம் இல்லையா? ஆப்பிரிக்கா, இலங்கை, மலேயா, இந்தியா என்று எல்லாம் கணக்குப் போடுகிறோம் இல்லையா? அந்த தேசம் எல்லாம் அப்படியே பின் தங்கிப் போய் விட்டன.
மின்சாரம் உற்பத்தி செய்வோம்
மேலை நாட்டினர் மின்சாரத்தைப் பயன்படுத்தி யந்திரங்கள் செய்தார்கள். மின்சாரத்தைப் பயன்படுத்தினதால் தொழில் முன்னேற்றம் ஏராளமாக ஆகிவிட்டது. தொழில் முன்னேற்றம் ஏற்கட்டதனால் நாடு பொருளாதார முன்னேற்றம் அடைந்தது. ஆனால், நம் நாடு பின் தங்கிய நாடாக இருந்து. அப்பொழுது நமக்குத் தொழில் எல்லாம் பின் தங்கிப் போய்விட்டது. சுயராஜ்யம் வந்த பிறகுதான் நாம் முன்னேறியுள்ளோம். நாமும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது எப்படியென்று யோசித்தோம். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் ஏராளமான தொழில் வளர்ச்சி பெறலாம் என்று சொல்ல வேண்டியதில்லை. தொழில் வளம் பெருகும். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் மட்டும் போதுமா மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றால் மின்சார உற்பத்தி பண்ட வேண்டியிருக்கிறதில்லையா? மின்சார உற்பத்திக்கு எங்கே போகிறது. அதற்கு வேண்டிய இயற்கை வசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மின்சாரத்தையும் தண்ணீரிலிருந்துதான் உற்பத்தி பண்ணுகிறோம். காவேரித் தண்ணீர் வந்து எப்படி விவசாயத்திற்குக் கால்வாய் வெட்டி விவசாயம் பண்ணுறோமோ அது மாதிரி தொழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் மின்சாரத்தை உற்பத்தி பண்ண வேண்டும். மேட்டூரிலே ஏற்கனவே மின்சார உற்பத்தி இருக்கிறது. அது போதவில்லை. அதே போல இப்பொழுது உற்பத்தி பண்ணணும். ஒரு வருஷத்திலே 7 மாதத்திற்கு மேலே காவேரியிலே தண்ணீர் விடுறோம் இல்லையா. மீதி தண்ணீர் ஏன் வீணாகப் போகணும்? அதற்காக பழையபடி உயரத்திற்குக் கொண்டு வந்து அணைகட்டி, நீரைத் தேக்கி வைத்து, குழாய் மூலம் அதை அனுப்பி மின்சாரம் பண்ணுகிறோம். அதே மாதிரி பவானி ஆற்றிலேயும் குந்தா என்று ஒரு திட்டம் போட்டு இருக்கிறோம். நம்முடைய மதிப்பிற்குரிய தலைவர் நேருஜி அவர்கள் சென்ற மார்ச்சு மாதம் அதைத் திறந்து வைத்தார். இது ஒரு பெரிய திட்டம். இதைப்போல் பெரியாரில் ஒரு திட்டம். எத்தனையோ இடத்திலே திட்டம் போட்டும்கூட அத்தனையும் போதவில்லை. எவ்வளவு மின்சாரத் திட்டம் உற்பத்தி பண்ணியும்கூட மின்சாரத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.
இயற்கைத் தண்ணீரை வைத்துக்கொண்டு மின்சார உற்பத்திசெய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். ஏன் அப்படி இருக்கிறோம்? நமக்குத் தேவை அதிகரித்து வருகிறது. இப்பொழுது எதற்கெடுத்தாலும் மின்சாரம் கேட்கிறார்கள். விவசாயத்திற்கு மின்சாரம் கேட்கிறார்கள். மாடு கட்டி தண்ணீர் இறைத்தால் 1 ஏக்கர் தண்ணீர்தான் பாயும். பம்பு செட்டு வைத்தால் எவ்வளவு ஏக்கருக்கு வேண்டுமானாலும் பாய்ச்சலாம். 10-15 ஏக்கருக்குத் தண்ணீர் பாயும். தண்ணீர் இல்லை என்றால் ஆழமாக்க் கூட தண்ணீர் எடுக்கலாம். 150 அடிக்குக் கீழே இருந்துகூட தண்ணீர் எடுக்கலாம். அதையெல்லாம் மின்சாரத்தாலேதான் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல. தொழில் செய்ய மின்சாரம் வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய தொழிற்சாலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது அல்லவா. அந்த மின்சாரத்தை வைத்துக் கொண்டுதானே தொழிற்சாலை ஏற்படுத்த முடியும். கிராமங்களுக்கெல்லாம் வெளிச்சம் வேண்டி இருக்கிறது, இதற்கெல்லாம் நாம் இப்பொழுது ஏற்படுத்தக்கூடிய மின்சார நிலையத்திலிருந்து போதவில்லை மின்சாரம். இன்னும் பிதிபாக மின்சார உற்பத்தி பண்ண வேண்டியிருக்கிறது. நெய்வேலியிலே உற்பத்தி பண்ணப் போகிறோம். மின்சார உற்பத்தியைப் பண்ணுவதன் மூலமாக மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ன? இவை எல்லாம் உற்பத்தியாகிற காலத்திற்குள் இன்னும் இரண்டு பங்கு தேவை அதிகமாகிவிடும். அதற்கு இது போல இரண்டு பங்கு மின்சாரம் தேவைப்படும். அப்புறம் புதிதாக எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிப்போம். நம் நாட்டிலே இதற்கு வரம்பு கிடையாது.
எதற்கு உச்சவரம்பு?
இப்போது உச்சவரம்பு போடுகிறோம் இல்லையா. அது மாதிரி வளர்ச்சிக்கு வரம்பு காட்ட முடியாது. வரம்பு கட்டவும் கூடாது. வளர்ச்சிக்கு வரம்பேகூடாது. எதுக்கு வரம்பு கட்டணும் தெரயுமா? மற்றவர்களை இல்லாதவர்களாக்கும் தனிப்பட்டவர்கள் வளர்ச்சிக்கு வரம்பு கட்டணும். சமுதாய வளர்ச்சிக்கு வரம்பு உண்டா என்ன? சமுதாய வளர்ச்சுக்கு எல்லா விதமான உதவியும் பண்ணி மேலும் மேலும் அது வளர்ச்சியடைவதற்கு உதவி செய்துகொண்டே போக வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு வேண்டிய உதவி பண்ணணும் என்று சொன்னால் தனிப்பட்டவர்களுடைய வளர்ச்சிக்கு ஒரு வரம்பு வேண்டும் இல்லையா. மற்றெல்லாத்தையும் ஒத்துக்கொள்வார்கள். விவசாயம் பண்றத்துக்காக காவேரிக்கு அணை போடணும். வாய்க்கால் வெட்டணும் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்லுவார்களா? அப்புறம் பணம் வரும் இல்லையா.
அந்தப் பணத்தை என்ன பண்ணுவது? அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் கிடைத்தவரை எடுத்துக் கொடுத்துவிடு என்று சொல்லுகிறார்கள். அந்தப் பணத்தை யார்க்குக் கொடுக்கணும் என்கிறேன். இப்பொழுது வாய்க்கால் வெட்டினோம் என்றால், அதன் மூலமாகத் தண்ணீர் ஊர் முழுவதும் பரவுகிறது இல்லையா. அப்படி இல்லாமல் எங்க வீட்டுக்கு மட்டும் தண்ணீர் கொடு என்றால் நியாயமா என்ன? எனக்கு மட்டும் தண்ணீர் வருகிற மாதிரி பண்ணிக்கொடு என்றால் என்ன அர்த்தம்? அதிலே என்ன நியாயம் இருக்கிறது? உனக்கு மட்டும் வேண்டும் மற்றவர்களுக்கு வேண்டாமா என்ன? நீ எவ்வளவு நாளைக்குத் தண்ணீரைத் தேக்கி வைப்பாய்? அப்படித் தேக்கி வைத்தால் தான் நல்லா இருக்குமா? நாற்றமெடுத்துப் போகும். கெட்டுப் போகும். அப்புறம் நோய் வரும். கொசு வரும். வெள்ளம் வந்தால் ஆபத்து. எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய்விடும். அதனாலே தேக்கி வைத்தாலும் ஆபத்து. தேக்கி வைக்கா விட்டாலும் ஆபத்து. அதற்காக நாம் என்ன பண்ணுகிறோம்? அணையைப் போட்டு அங்கே வாய்க்கால் வெட்டி பாசன வசதி பண்ணிக் கொடுக்கிறோம். எல்லோருக்கும் வசதியாக பண்ணிக் கொடுக்கிறோம். எல்லோருக்கும் வசதியாக இருக்கத்தானே நீரைத் தேக்கி வைத்து அனுப்புகிறோம்? தண்ணீர் சுற்றிச்சுற்றி வர வேண்டியதுதான்.
பணத்தைத் தேக்கி வைக்காதே!
தண்ணீர் மழையாகப்பெய்யுது, ஆறாக ஓடுது. அதை அணைக் கட்டித்தேக்கிவைக்கிறோம். பிறகு வாய்க்கால் வெட்டி விவசாயத்திற்கு அனுப்புகிறோம். கொஞ்சம் தண்ணீர் சமுத்திரத்திற்குப் போகிறது. பிறகு என்ன ஆகிறது? இந்த மழை நீர் வற்றி மேகமாக மேலே போய் மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியுமா என்ன? அதேபோல் தான் பணமும். சுத்தி சுத்தித்தான் வரணும். மழை இல்லையென்றால் நம் வாழ்க்கை நடக்காது. பறவைகள் வாழ முடியாது. மிருகங்கள் வாழ முடியாது. மழை இல்லையென்றால் யாரும் வாழ முடியாது. மழை இல்லையென்றால் யாரும் வாழ முடியாது. மனிதனுக்கும் மழை அவசியம். மிருகத்திற்கும் மழை அவசியம். பயிருக்கும் மழை அவசியம். மழை இருந்தால்தான் வாழ மிடியும். இல்லாவிட்டால் வறட்சி ஏற்பட்டுப்போகும் மழைக்கு அவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ அதே மாதிரிதான் பணத்திற்கும். மழையைப் போலத்தான் பணமும் சுத்தி சுத்தி வரவேண்டும். மழை எல்லா இடத்திலேயும் இருக்கிற மாதிரி எல்லா இடத்திலேயும் செல்வம் இருக்க வேண்டும். ஒருவர் மட்டும் சொந்தமாக உபயோக்ப்படுத்தக் கூடாது. சொந்தமாகப் பயன்படுத்தினால் அதற்குரிய செல்வாக்குப் போய்விடும் என்ற மாதிரி நிலைம் உண்டாக வேண்டும். “சரிதான் போ ஐயா உன் பணம் வேண்டாம்” என்று சொல்லுகிற நிலைமை வர வேண்டும். செல்வத்தைப் பெருக்கணும். அதோடு பலருக்கும் பயன்படுவதாக விநியோகம் பண்ண வேண்டும். நம்முடைய அரசாங்கத்துன் கொள்கை அதுதான். அந்தக் கொள்கையை நாம் ஒன்றும் புதிதாகப் பண்ணவில்லை. திடீரென்று சமதர்ம கொள்கை என்று சொல்லவில்லை.
திடீர் திட்டமல்ல
திடீரென்று திட்டம் கொண்டுவரவில்லை. திட்டீரென்று 5 வருஷத் திட்டம் கொண்டு வரவில்லை. சிலர் நின்க்கிறார்கள். திடீரென்று சமதர்மத் திட்டம் கொண்டு வந்து விட்டார்கள் என்று. அதெல்லாம் ஒன்றும் கிடையாது. 1938-ம் வருஷத்திலே முதல் முதல் காங்கிரசில் திட்டக் கமிஷன் ஒன்று போட்டார்கள். அதற்கு நம்முடைய மதிப்பிற்குரிய பிரதம மந்திரி நேருஜி சேர்மனாக இருந்தார். பெரிய தொழில் நிபுணர்கள் பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் மெம்பர்களாக இருந்தார்கள். அப்புறம் யுத்தம் வந்து விட்டதனால் ஒன்றும் பண்ண முடியாது போய்விட்டது. ஏற்கனவே திட்டம் போட்டு ஆரம்பித்து விட்டோம். திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கராச்சி காங்கிரசிலே சமதர்மக் கொள்கையை ஒத்துக்கொண்டோம். இதை யாரும் ஒத்துக்க கொள்வார்கள். கராச்சிக் காங்கிரஸ் தீர்மானத்தை புரட்டிப் டுரட்டிப் பாருங்கள். உங்கள் வீட்டிலே காங்கிரஸ் மெம்பர் யாராவது இருந்திருத்தால் அந்த ரசீதை எதுத்துப் பாருங்கள். அதில் இது மாதிரி கொள்கை இருக்கும். காங்கிரஸ் மெம்பராக்க் சேர்ந்தால் இதை எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஜாதி பேதம் கிடையாது. மத பேதம் கிடைதாது. வருவாய் இவ்வளவுதான் இருக்கணும். நிலம் இவ்வளவுதான் வைத்து இருக்க வேண்டும். ஜமீன்தார்கள் இப்படித்தான் இருக்கணும், என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. இல்லை என்று சொல்ல் முடியுமா? சொல்ல முடியாது. அதை வகுத்த பிறகு திட்டக் கமிஷன் போட்டிருக்கிறோம். இதை எல்லாம் திடீரென்று பண்ணவில்லை. முன் யோசனையோடுதான் பண்ணியிர்க்கிறோம். இது யாருக்குப் புதிதாகத் தோன்றும் என்று சொன்னால் சுயராஜ்யத்திலே நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் புதிதாகத்தெரியும். இப்பொழுது பிளானிங் கமிஷன்-திட்டக் கமிஷன் என்று பணம் கொடுத்து வைத்துருக்கிறோமே அதுமாதிரி நமக்கு சுயராஜ்யம் வந்த உடனே நாம் ராஜ்யத்தை எப்படி ஆளப்போகிறோம் என்று யோசனை பண்ண ஒரு கமிஷன் ஏற்படுத்தினோம். அதற்கு என்று திட்டம் போடாமலா இருப்போம்? திட்டம் போட்டுத்தான் பண்ண வேண்டும். ஏதோ சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று கத்தினார்கள். திடீரென்று சுயராஜ்யமும் வந்துட்டது என்று சொல்லுகிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தார். அந்த நினைப்பில்தான் நாமும் திராவிடம் திராவிடம் என்று கத்தினால் திராவிடம் திடீரென்று வந்துவிடும் வன்று மனப்பால் குடிக்கிறார்கள். அதனால் திராவிடம் வந்துவிடுமா என்ன? திராவிடம் எங்கே இருக்கிறது. அதை அவர்களால் அடைய முடியுமா? திராவிடர் என்று ஒரு நாடு இருக்கிறதா? எங்கே இருக்கிறது என்று நான் கேட்கிறேன். அது கற்பனையில் இருந்து உண்டானது. அந்தக் கற்பனையும் சொந்தச் சரக்கல்ல. அது எங்கே இருந்து வந்தது என்று சொன்னால் அது ஈரோட்டுப் பெரியார்கிட்டே இருந்து வந்தது. அவர்களுக்குச் சொந்த சரக்கே கிடையாது. இரவல் வாங்கினதுதான். எப்பவும் இரவல் வாக்குவதுதான் அவர்கள் வழக்கம். அதனாலே சுயராஜ்யம் திடீர்ன்னு சும்மா வந்துவிடவில்லை. ந்ல்ல முறையிலே அரும்பாடுபட்டு உதைபட்டு எத்தனையோ பேர் தூக்கில் தொங்கிமடிந்த பிறகுதானே சுயராஜ்யம் வந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கற்படாவாதிகள்!
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் “அடைந்தால் திராவிடம் இல்லையெனில் சுடுகாடு” எதுக்காக சுடுகாட்டுக்குப் போக வேண்டும். கேட்கிறேன். நீ ஒன்றும் அப்படி சாக வேண்டாம். ஏன் சாகறே. இன்பத் திராவிடமே என்று பாடினால் திராவிடம் வந்து விடுமா என்ன? நாட்டிலே எல்லாம் என்ன இருக்கிறது? திராவிடம் என்று ஒரு நாடு கிடையாது. ஏண்டாசாகறே என்று கேட்டா நீங்க தேசீய கீதத்திலே திராவிடம் என்று பாடுகிறீர்களே என்று கேட்கிறான். தேசீய கீதத்திலே திராவிடம் மட்டுமா பாடுகிறோம். பஞ்சாப் சிந்து…….. என்று எல்லாம் பாடுகிறோம். பல்வேறு நாகரீகங்கள் நிறைந்த நாடு நம் நாடு. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு நாகரிகம் இருந்தது. அதற்கு திராவிட நாகரிகம் என்று பெயர். எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலே சரித்திரம் காண முடியாத நிலையிலே ஒரு எல்லையே வரையறுக்க முடியாத நிலையிலே இன்னும் அது இருக்கிறது. ஆராய்ச்சி எல்லாம் நடக்கிறது. அது எப்பொது வந்தது? ஆரிய நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அதைப்பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அது எப்பொது வந்தது? ஆரிய நாகரிகம் எப்பொழுது தமிழ் நாட்டுக்கு வந்தது? எப்படி வந்தது? அதுவும் ஒரு ஆராய்ச்சி. இப்படி பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அப்பால் முஸ்லீம்கள் வந்தார்கள். அப்புறம் கிறிஸ்தவர்கள் வந்தார்கள். அது மாதிரி பல்வேறு மதத்தினரும் வந்தார்கள். அது மாதிரி பல்வேறு மதத்தினரும் இந்த நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். பல்வேறு நாகரிகமும் நிறைந்தது நம் நாடு. உலகத்திலேயே நம் நாட்டிற்கு ஏன் பெருமை என்றால் பல்வேறு நாகரிகத்தையும் தன்னுடைய நாகரிகமாகக் கொண்ட பெருமைதான் நமக்கு. யார் வந்தாலும் நம்மவர்கள் ஆக்கப்படுகிறார்கள். நல்லவர்களை நம்மவர்களாக்குவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறேன். ஆக்கக் கூடாதா என்ன? நல்லவர்கள் எங்கே இருந்து வந்தாலும் யாராயிருந்தாலும் நம்மவர்களாக்கிக் கொள்வதுதான் நம் கொள்கை. ஏதோ முஸ்லீம்கள் சண்டை, சமணர்கள் சண்டை, சைவர்கள் சண்டை, எங்கேயோ நடந்திருக்கும் ஒரு ஓரத்திலே. அதைத்தான் இப்பொழுது பிரமாதப்படுத்துகிறார்கள். அது எப்பொழுதும் நடக்கும். இப்பொழுது கும்பகோணத்திலே இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு ஊரென்று இருந்தால் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்களா என்ன? 4 பேர் ரவுடியாக இருப்பார்கள். 2 பேர் கள்ளச் சாராயம் காய்ச்சி இருப்பார்கள். 2 பேர் தப்பு பண்ணுகிறவர்களாக இருப்பார்கள். 2 பேர் தகராறு பண்ணுகிறவர்களாக இருப்பார்கள். இப்படி பலவிதமான ஆட்கள் இல்லாமலா இருப்பார்கள்? சண்டை இல்லாமலா இருக்கும்? பெரிய ஊரென்றால் அங்கே சண்டை போட்டுக்காமலா இருப்பார்கள்?
ஏன் சும்மா இருந்தீர்கள்?
ஒரு பெரிய ஊரிலே போய்ப் பாருங்கள். நம்ம கோயில் இருக்கும். கொஞ்ச தூரத்திலே சர்ச் இருக்கும். மசூதி இருக்கும். இவை எல்லாம் என்ன பொய்த் தோற்றங்களா என்ன? இந்தக் கோபுரங்கள் எல்லாம் பொய்த்தோற்றமா? மசூதி பொய்த் தோற்றமா? இதையெல்லாம் இன்றைக்குக் கட்டிவிட முடியாது. இந்த சண்டை போடுகிறவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். சண்டை போடுகிறவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்; அவன் நாகரிகம் வேறு; நம் நாகரிகம் வேறு. இதுதான் திராவிட நாகரிகம் என்று பிரிக்க முடியுமா என்ன? திராவிட நாட்டைப் பிரித்துக் கொடு கொடு என்கிறீர்களே, எங்கேயிருந்து பிரித்துக் கொடுக்கிறது? திராவிட நாடு என்பது எது? நீங்கள் சொல்லுகிறீர்கள்; மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் இந்த பகுதிகளெல்லாம் சேர்ந்தது திராவிடம் என்று சொல்லுகிறீர்கள். வாஸ்தவம்; அதுதான் திராவிடம். ஒரு காலத்திலே நீங்களெல்லாம் ஒன்றாக இருந்தீர்களா? இல்லையா? இப்போது ஏன் பிரிஞ்சு போய் விட்டார்களே. மலையாளத்தார் திருவாங்கூர், கொச்சியோடு போய் விட்டார்கள். அப்பொழுது எல்லாம் நீங்க சும்மாதானே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்? போகிறவர்களை பிடித்து வைக்க முடியுமா, என்ன? போகிறவர்களுக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி, போய்விட்டு வா என்கிறோம். உங்களுக்கு திராவிடத்திலே நம்பிக்கையிருந்தால், நீங்க என்ன செய்திருக்கணும் அப்பா, நாமெல்லாம் ஒரே இனமாச்சே. நாம் ஏன் பிரிந்து போகவேண்டும்? ஒற்றுமையே வெற்றி தரும் என்பது உனக்குத் தெரியாதா? என்று காலைப்பிடித்து, கையைப் பிடித்து நாலு நல்ல வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருக்க வேண்டியதை விட்டுவிட்டு, இப்போஓது எதுத்ததற்கெல்லாம் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே, போராட்டம் செய்வோம் என்று சொல்கிறீர்களே. அப்பொழுது, எங்களைத் தடுத்து நிறுத்தியிருந்தால் போராடுவோம் என்று சொன்னாயா? திராவிடத்திலே நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? பட்டணத்திலே பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். பட்டினி இருந்தார். நான் பிரிந்துதான் போவேன் என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது நீ என்ன செய்திருக்க வேண்டும்? பிரியவே கூடாது என்று நீயும் எதிர்த்த வீட்டில் உட்கார்ந்து கொண்டே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்தாயா? இல்லையே.
யார் சொல்லிக் கொடுத்தது?
இப்பொழுது மட்டும் திராவிடர் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு வருகிறாயே, திராவிடம் என்று யார் சொல்லிக் கொடுத்தது? பெரியார்தானே சொல்லிக் கொடுத்தார். பெரியார் ரொம்ப கெட்டிக்காரர். ரொம்ப சாமர்த்தியசாலி; ஆதலால், என்ன செய்தார்? அவர்க்குத் தெரியும்; திராவிட நாடு கிடைக்காதென்று, அதனால் திராவிட நாடும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். தமிழ் நாடே போதும் என்கிறார். அவர்க்குத் தைரியம் இர்க்கிறது. எதையும் சொல்வார்; எதையும் செய்வார். அவர் என்ன மக்களிடத்தில் போய் வோட் வாங்கப் போகிறாரா என்ன? யாரைக் கண்டு அவர் பயப்பட வேண்டும்? உனக்குத் தைரியம் இர்க்கிறதா? எங்கே இருக்கிறததென்று கேட்கிறேன். உனக்குக் கொள்கையிர்க்கிறதா? ஒரு திட்டமான கொள்கையும் இல்லை; ஒன்றுமில்லை; அதிலே நம்பிக்கையும் இல்லை. நீங்கள் இப்பொழுது ரொம்ப பலஹீனமாகப்போய்விட்டீர்கள். மறைக்க முடியுமா இதை? அந்த பலஹீனத்தை மறைப்பதற்காக திராவிட நாட்டை விட்டு விட்டு காங்கிரசை ஒழிப்பதுதான் வேலை என்று சொல்லுகிறார்கள். திராவிடத்துக்கு வேலை இல்லை. அதைப் பொட்டலம் கட்டி வைத்து விட்டார்கள் எவ்வளவு நாளைக்கித்தான் இந்த வேலை செய்வீர்கள். இதிலே காங்கிரசை ஒழிக்க வேண்டுமென்று யார் யாரிதமோ துணைக்குப் போகிறார்கள். கம்யூனிஸ்டுகள் இப்போது துணை கிடைத்திருக்கிறார்கள். புதுக் கூட்டாளிகள். கம்யூனிஸ்டுகள் திராவிட நாடு வாங்கித்தருகிறேன் என்று சொல்லுகிறார்களா? இல்லை. திராவிட நாடு என்று ஒத்துக்கொண்டார்களா? 1952-ம் வருஷத்திலே ஏதோ பெரியார் கொஞ்சம் ஆதரவு காட்டினார். பின்னாலே விட்டால் போதுமென்று கழன்று ஓடிவந்து விட்டாரே. அவருக்குத் தெரியும். கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் சாப்பிட்டு விடுவார்கள் என்று. நீ நினைக்கிறாய், சாப்பிட்டு விட்டால் அவன் வயிற்றுக்குள்ளே போய் அவன் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்து விடலாமென்று அவன் உன்னை அப்படியே ஜீரணம் செய்து விடுவானே. உலகத்திலே கம்யூனிஸ்டுகளிடத்தில் மாட்டிக் கொண்டவக்கள் யாரும் மீண்டது கிடையாது. நீங்கள் திராவிடம் வேண்டுமென்று கேட்கிறீர்கள். அவன் இந்தியாவையும் சேர்த்து அகில அண்டம் வேண்டுமென்கிறான். எப்போது அவர்கள் மற்றவன் கொள்கையிலே சேர்ந்தார்கள்?
ஊரை இரண்டாக்குபவர்கள் அறிஞர்களா?
இப்பொது சுதந்திரா பார்ட்டி யென்று ஒன்று வந்திருக்கிறது. நீங்கள் அதிலே ஒரு காலை வைக்கிறீர்கள்; இங்கே ஒரு காலை வைக்கிறீர்கள். இப்போது எங்கேயிருக்கிறீர்கள் என்பது தெரியவேயில்லை. கம்யீனிஸ்டுகள் கழுத்தைப் பிடித்து விட்டார்கள். இப்போது என்ன செய்வதென்று இரண்டு பேரும் தத்தளிக்கிறார்கள். யார் யாரை இணைப்பது? இப்போது சுதந்திரா பார்ட்டிக்காரர்கள் கையைக் கழுத்தில் போட்டுக்கொள்ளப் போகிறார்கள். எங்கே போக்ப் போகிறீர்கள்? எந்தப் பாதையில் போகப் போகிறீர்கள்? எந்தப் பாதையிலே போவதென்று தெரியாமல் விழிக்கிறீர்கள்? நாட்டிலே புதிதாக ஒரு பிரிவினையை உண்டாக்குகிறார்கள். நம்முடைய நாட்டிலே எத்தனையோ அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ காரியங்கள் செய்து கொண்டு வருகிறோம். ஒருவருக்கு ஒருவர் சண்டையை உண்டாக்குவது பெரிய காரியமல்ல, லேசாக உண்டாக்கி விடலாம். எல்லோரையும் ஒன்றாக்குவதுதான் பெரிய காரியம். இப்போது கும்பகோணம் நகரத்திலே ஒருவன் வந்து ஊரிலுள்ள சண்டைகளையும் தீர்த்து வைத்து எல்லோரையும் ஒன்றாக்கினால் நல்லது; அவனை எல்லோரும் நல்லவன் என்பீர்கள். அப்படியில்லாது ஊரை இரண்டாக்குகிறவனை நல்லவன் என்று சொல்வீர்களா என்ன? இப்போது ஊரை இரண்டாக்குகிறவர்களைத்தான் பார்த்தால் சிரிக்க மாட்டானா? உங்களுக்குத்தொந்தரவு கொடுக்கிறவர்களுக்கு அந்தப் பட்டமா. அதுகூட அவர்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறதே.
நம்ப பழைய ஆட்கள்தான்!
சுதந்திரா பார்ட்டியில் யார்யார் இருக்கிறார்கள்? அவர்களும் நம்ப பழைய ஆட்கள்தான். ஏதோ ரத்தின சாமியைப் போன்ற பழைய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் இரண்டு பேர் இருப்பார்கள். இய்கேயாம் ஓடாமல் அங்கேயும் ஓடாமல் இருக்கிறார்களே, அவர்கள் நாலைந்து பேர் இருப்பார்கள். அவர்களுக்கு என் மேல்தான் கோபமே தவிர காங்கிரஸ் மேல்

நம் தலைவர் காமராஜர்

நம் தலைவர் காமராஜர்

படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்ம வீர்ர், பாரத ரத்னா, கிங் மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற நம்தலைவர் காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி மக்களின்மனதில் நீங்காத இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய – அவரது ஆட்சிக்காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத்திறக்கப்பட்டன.
இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.
1. வாழ்க்கை நிகழ்வுகள்

பிறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 – ம்நாள் அழைக்கப்படும் நகரம் முன்பு விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டது.
காமராஜரின் தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.
முதலில் காமராஜருக்கு “காமாட்சி” என்று பெயரிட்டார்கள். காமாட்சி என்பது அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயராகும். சிவகாமி அம்மாள் காமராஜரை “ராஜா” என செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராஜர் என்றே அழைத்தார்கள்.
காமராஜரின் தந்தை விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
தாய் மாமன் கருப்பையா நாடார் ஜவுளிக்கடை வைத்திருந்தார். இன்னொரு தாய்மாமன் காசி நாராயண நாடார் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்த நடத்தி வந்தார்.
காமராஜர் தங்கை பெயர் நாகம்மாள். அவர் மீது காமராஜர் அதிக பாசம் வைத்திருந்தார்.
பள்ளிப்படிப்பு

5 வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். காமராஜர் ஏனாதி நாயனார் வித்யாலாயா ஆரம்ப몮பள்ளியிலும் பயின்றார். இளம் வயதில் கபடி விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டு காமராஜர் விளங்கினார்.
அரசியல் ஆர்வம்

இளம் பருவத்திலேயே காமராஜர் அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்க அதிக ஆர்வமாக இருந்தார்.
படிப்புக்கு முற்றுப்புள்ளி

காமராஜருக்கு 6 வயது இருக்கும்போதே 1909 ஆம் ஆண்டு காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் காலமாகிவிட்டார். தந்தையை இழந்த காமராஜர், சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார். பின்னர் தனது 12 – வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியது. அதன் பின்னர், ஒரு ஜவுளிக்கடையில் காமராஜர் வேலையைப் பார்த்தார். பின் அவரது தாய் மாமன் மூலம் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
நாட்டுப் பற்று

இளம் வயதிலேயே நாட்டுபற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் பற்றி தெரிந்து கொண்டார்.
நாட்டின் விடுதலைக்காக மக்கள் அப்போது போராடி வந்தார்கள். விடுதலைக்காகப்போராடுபவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.
இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.
திருமண ஏற்பாடு

திருமணம் செய்து வைத்தால் குடும்பத்தைக்கவனிப்பார், தொழிலிலும் அக்கரையுடன் இருப்பார். காமராஜருக்குப் பொறுப்பு உண்டாகும் என அவரது தாய் சிவகாமி அம்மாள் நினைத்தார். காமராஜரின் தாய், மாமனாருடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.
இதனை அறிந்த காமராஜர் தனக்கு திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். திருமணம் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால்தாயார் சிவகாமி அம்மாள் திருமணம் பற்றி பிறகு வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்.
சுதந்திர போராட்ட ஈடுபாடு

திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் இன்னொரு தாய்மாமனாரான காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் எனக் கருதிய தாய் சிவகாமி அம்மாள். காமராஜரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக்கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார்.
இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். விருதுபட்டியில் தொழிலில் கவனம் இல்லையென்று திருவனந்த புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு இப்படி தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என எண்ணி மீண்டும் காமராஜரை விருதுப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.
அரசியல் போராட்டக் களங்கள்

தனது சொந்த ஊரான விருதுபட்டிக்கு மீண்டும் வந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1923 ஆம் ஆண்டு நாகபுரி கொடிப்போராட்டத்தில் பங்கு கொண்டார். அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
பின்னர் 1925ஆம் ஆண்டு கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பணிக்காக 1926 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி – சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் பணிபுரிந்தார் சென்னையில் 1927 ஆம் ஆண்டு கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதிபெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் இரண்டாமாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933ம் ஆண்டு காமராஜர் மீது விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு வழக்கு பொய்யாக உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் காமராஜர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
காமராஜரின் உழைப்பால் 1934 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பெருவாரியான வாக்குகளைப்பெற்று காங்கிரஸ் வென்றது. 1936 ஆம ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1937 – ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார். 1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1941 ஆம் ஆண்டு யுத்த நிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த்தால், கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நகராட்சித் தலைவர்

விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை. 1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.
1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர்-
“என்னை நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்குப்பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1942 ஆகஸ்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1945இல் காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். 1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். 1948ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1950 ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.
காமராஜர்திட்டம் (கே பிளான்)

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராஜர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார்.
இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்தில்லுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராஜர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள்.
தான் கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்த பெருந்தலைவர் காமராஜர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
காமராஜரின் இந்த துணிச்சலான செயலைக் கண்டு உலகமே பாராட்டியது.
காலா காந்தி

1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பின்பு காமராஜரை ‘காலாகாந்தி’ (கருப்புக் காந்தி) என்றே அழைத்தார்கள். காந்திஜியின் மறு அவதாரமாக்க் கருதினார்கள்.
ராஜதந்திரி

1965ஆம் ஆண்டு பிரதமர் பதிவியில் இருக்கும்போதே ஜவஹர்லால் நேரு காலமானார். அவருக்கப் பின் யாரைப் பிரதமராக்குவது என்று பல கேள்விகள் எழுந்தது. தனது அரசியல் ஞானத்தால் போட்டியின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்க வழி செய்தார். அதனால் இவரை ராஜதந்திரி என்றே அனைவரும் புகழ்ந்தார்கள்.
கிங் மேக்கர்

ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர்.
போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார்.
இதனால் பெருந்தலைவர் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.
தேர்தலும் விபத்தும்

1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருது நகர் தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட்டார். தென்மாவட்டங்களில் பொது தேர்தலில் நின்ற மற்ற வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்ததால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றிபெற இயலாத நிலையும் உருவாகியது.
நாகர் கோவில் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு அமோக வெற்றி அடைந்து எம்.பி. ஆனார்.
சரித்திர நாயகன்
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி:


தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
என்ற கண்ணதாசனின் வரிகள் நம் அனைவர் கண்களிலும் நீர் த்தும்ப வைத்துவிடுகிறது அல்லவா?
2. முதலமைச்சர் காமராஜர்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.
வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.
கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அரசியல் பணி

மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.
பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.
“இந்தியாவைக் காப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம்” என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.
அணைக்கட்டுகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.
மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.
சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.
நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.
1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்

காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.
3. காமராஜர் சிந்தனைகள்

காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.
பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.
இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.
எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.
காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.
கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் “பெருந்தலைவராகத் தம்மைக் கருதுவார்கள் என பல அரசியல் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உணரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி காமராஜர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்தது.
சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்மவீர்ர் கலந்து கொண்டார் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரவில்லை. மிகவும் தாமதமாக வந்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதனை மேடையிலிருந்த காமராஜர் கவனித்தார். சிவாஜி கணேசனை அருகில் அழைத்தார். “நீங்கள் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் முதலிலேயே வந்து விடுங்கள். அல்லது கூட்டம் முடிந்தபின் வாருங்கள்.”
“இப்படி இடையில் வருவதை நிறுத்திவிடுங்கள்” என்றார் பெருந்தலைவரின் சீரிய சிந்தனை கலந்த அறிவுரையை ஏற்ற நடிகர் திலகம் அதன் பிறகு எல்லாக் கூட்டத்திற்கும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரம்பித்தார்.
காலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு.
வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்

நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.
வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.
காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.
வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.
படிக்கும் போது அரசியல் வேண்டாம்

அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.
படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.
படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.
எதிர்க்கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்

எதிர்க்கட்சியா? அல்லது எதிரிக் கட்சியா? என்று சில ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரைப் பார்த்து அடிக்கடி கேட்பது உண்டு. ஏனென்றால் எடுத்ததுக் கெல்லாம் ஆளுங்கட்சியினரைக் குறைசொல்லும் போக்கு எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது.
அதைப்போல ஆளுங்கட்சிக்காரர்களும் எதிர்க்கட்சிக்காரர்களை எவ்வாறு பிரச்சனைகளில் மாட்டி வைக்கலாம் என்று காத்து கிடப்பதும் உண்டு. ஆளும் கட்சியில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வைத்திருந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து எளிமையின் சின்னமாக விளங்கியவர். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தனது தாயார் சிவகாமி அம்மையாரை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.
இதனைக் கவனித்த சில நண்பர்கள் “உங்கள் அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்து உங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாமே” எனக் கேட்டார்கள். உடனே காமராஜர் “இது நல்ல யோசனைதான் ஆனால் என் அம்மா என்னுடன் இருந்தால் அவர்களைப் பார்க்க நிறைய உறவினர்கள் வருவார்கள். இதைப்பார்க்கும் எதிர்க்கட்சியினர் காரியம் செய்து கொடுப்பதாகச் சொல்வார்கள். “ஆட்சிக்கே களங்கம் கற்பிப்பார்கள்” என்றார் காமராஜர்.
எதிர் கட்சியினரிடம் அதிக்க் கவனமாக இருக்க வேண்டும். என்பதை மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியவர் காமராஜர்.
எதிர்க்கட்சிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது காமராஜரின் பொன் மொழியாகும்.
உழைத்து வாழ வேண்டும்

இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.
காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.
உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.
வீரமுடன் வாழுங்கள்

“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.
நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.
1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.
வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.
மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்