காமராஜரின் சொற்பொழிவுகள்
சொல்லும் செயலும்
கும்பகோணத்தில்
திரு. கே. காமராஜ் அவர்கள் ஆற்றிய உரை:-
கும்பகோணத்தில்
திரு. கே. காமராஜ் அவர்கள் ஆற்றிய உரை:-
நம்முடைய நாடு ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட நாடு. ஜனநாயக நாட்டிலே மாறுபட்ட கருத்துள்ள அரசியல் கட்சிகள் பல இருப்பது இயற்கை. கட்சி இருக்க வேண்டும் என்பதற்காக கண்டதை உளறக்கூடாது. ஜனநாய்த்திலே சட்டத்திலே பேச்சுரிமை கொடுத்திருக்கிறது. அதனால், நானு உளற வேண்டுமென்று சொன்னால் நியாயமா என்ன? அரசியல் கட்சிகளும், சட்டத்திலே உரிமை இருந்தாலும் ஒரு வரையறை தங்களுக்குள் பண்ணுகிற பழக்கம் இப்போது ந்ம் நாட்டிலே இல்லை. கொஞ்ச நாள் கழித்து வரலாம். பொதுவாக அரசியல் கட்சிகள் பேச்சு உரிமையாயும் எழுத்து உரிமையையும் நல்ல முறையிலே பயன்படுத்த வேண்டும். எழுத்து உரிமை கொடுத்து இருக்கிறது. அபற்காக யாரைப்பற்றியும் கன்னாபின்னாவென்று எழுதலாமா? பேச்சு உரிமை கொடுத்திருக்கிறது என்றால், என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்ன? பேசுவதற்கு வரையறை இருக்க வேண்டுமென்று நான் சொல்கிறேன்.
ஏதோ மந்திரியைத்தான் கன்னாபின்னான்னு பேசுகிறீர்கள். எழுதுகிறீர்கள். எங்களுக்குத்தான் வேலை ஒண்ணும் இல்லை, கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களை சும்மா விடுகிறீர்களா? யாரையும் வெளுத்து வாங்கிவிடுகிறீர்கள். அதே மாதிரிதான் பத்திரிகைகளும். ஏதோ அரசாங்கத்தை நடத்துகிறோம். எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்ல்லாம். கேட்டுக்கொள்கிறோம். ஆபாசமாக எழுதுகிறீர்கள். சும்மாயிருக்கிறோம். தனிப்பட்டவர்களைக்கூடவா ஆபாசமாக எழுதுகிறது? என்னவோ எழுதுகிறார்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல். அவர்கள் மேல் குற்றம் சொல்ல வேண்டுமென்று சொல்லவில்லை. அதை நீங்களும் வாங்கிப் படிக்கிறீர்கள். உங்களுக்கு அது மாதிரி விஷயம் போட்டால்தான் படிக்கிறீர்கள் அதனால், எழுதுகிறவனும் அப்படி எழுதுகிறான். உங்களுக்குப் புத்தி சொல்லவோ நமக்கு நல்ல உபதேசம் பண்ணவோ நம் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டுமென்றோ இருந்த அந்தக் காலம் எல்லாம் போச்சு. பத்திரிகையிலே எப்பொழுதுமே நாட்டுக்கு நல்ல தொண்டு செய்யவேண்டும் என்ற காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வியாபாரம் செய்யவேண்டும் என்பதினால் கன்னாபின்னாவென்று எழுதுகிறார்கள். அப்படித்தான் படமும் போடுகிறார்கள்.
பத்திரிகைளின் பொம்மைப் படம்
நீங்கள் கூட பத்திரிகையிலே பார்க்கலாமே. யாரையோ படம் போடுகிறார்கள். ஒரு நாளைக்குக் குரங்கு. ஒரு நாளைக்கு ராமர் படம். ஒரு நாளைக்கு யானை படம் போடுகிறார்கள். ஏதாவது போட வேண்டும். அப்படிப் போட்டால்தான் பத்திரிகை விற்கும். என்னைக்கூட பொம்மைப் படம் போடுகிறார்கள். நான் ஒன்றும் கோப்ப்படுவதில்லை. நான் இதைச் சொன்னவுடனே நீங்கள் எல்லாம் சிரிக்கிறீர்கள் இல்லையா. (சிரிப்பு) அதே மாதிரி நானும் அதைப் பார்த்துச் சிரிப்பேன். ஏன் சிரிக்கிறேன்? பைத்தியம், இப்படிப் படம் போடுகிறார்களே என்று நான் சிரிக்கிறேன். பத்திரிகையிலே படம் போடுகிற வழக்கம் உண்டு. அதனாலே ஆபாசமாகப் போடுகிறதா என்ன? வேடிக்கைக்கு தமாஷ் படம் போடுறான் என்று சொன்னால் ஆபாசமாகவா போடுகிறது? பிறர் மனத்தைப் புண்படுத்துகிற மாதிரி படம் போடுவது எழுதுவது இவை எல்லாம் ரொம்பநாளைக்கு நடக்காது. கொஞ்ச நாளைக்கு நடக்கும். அப்புறம் எல்லோருக்கும் தெரிந்துபோகும், இதிலெல்லாம் ஒன்றும் இல்லை என்று. அதற்காக நாம் அதிகமாக்க் கவலைப்பட வேட்டியதில்லை.கொள்கையிலே சத்து இருந்தால்தானே!
ஆனால், ஜனநாய் ஆட்சியிலே அரசியல் கட்சிக்கார்ர்கள் அவரவர்கள் கொள்கையைச் சொல்ல வேண்டும். அதுதான் முக்கியம். இப்போது நான் உங்களிடம் வந்திருக்கிறேன். என்னுடைய கொள்கை என்ன? அதைச் சொல்லுகிறேன். மற்ற கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி, அவன் கொள்கையை என்ன என்று சொல்லட்டும். சுதந்திரா கட்சி, அவன் கொள்கையைச் சொல்லட்டும். திராவிட முன்னேற்றக் கழகம், அவன் கொள்கையைச் சொல்லட்டும். ஆனால், கொள்கைக்குப் பக்கத்திலேயே அவர்கள் போக மாட்டேன் என்கிறார்களே காரணம் என்ன? அவர்கள் கொள்கையிலே சத்து இருக்கிறது? அதைச் சொல்ல முடியாது. அவன் கொள்கையைச் சொல்லாமல் கன்னாபின்னாவென்று என்னவோ சொல்லுகிறான். அது மொத்தத்திலே நல்ல முறையில்லை. நம்முடைய ஜனநாயகப் பண்பு வளரவேண்டும் என்று சொன்னால் திடீர் என்று எப்படி முடியும். இங்கிலாந்திலே நூற்றுக்கணக்கான வருஷங்களாக அதை வளர்த்து வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடனே அதைப்போல நடக்க முடியுமா? அமெரிக்காவைப் பார்த்தவுடனே அமெரிக்காவைப்போல வள முடியுமா? பிரிட்டிஷ் ராஜ்யத்தைப் பார்த்தவுடனே அது போல் இருக்கமுடியுமா என்ன? தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் தவிர மற்றவர்களைத்தான் அவன் பார்க்கிறான்.சுயராஜ்யம் வந்து 14 வருஷங்கள் ஆகிவிட்டதே. பட்டினியைத்தீர்த்து விட்டாயா? பஞ்சத்தை ஒழித்து விட்டாயா? என்று கேட்கிறார்கள். அமெரிக்காவைப் பார்த்தாயா? ரஷ்யாவைப் பார்த்தாயா? என்றும் கேட்கிறார்கள் அங்கெல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? அங்கே பார்த்துப் பயன் என்ன? நம் ஊரையே கார்த்தால் போதும். இங்கே சோறு இல்லை, வீடு இல்லை. வேலை இல்லை, படிப்பு இல்லை. அதைத்தானே பார்க்கவேண்டும். இந்த ஊரிலே வேலை இல்லாதவர்களுக்கும், படிப்பு இல்லாதவர்களுக்கும், என்ன பண்ண வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதற்கு வேண்டிய பிரயத்தனம் நாம் பண்டவேண்டுமே தவிர, வேறு நாட்டைப் பார்த்து என்ன எண்ட இருக்கிறது? வேற்று நாட்டின் சில அனுபவங்கள் நமக்குத் தெரியவேண்டும். அந்த நாட்டுக்கு சுயராஜ்யம் வருவதற்கு முன்னாலே அவர்கள் சொந்த அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முன்னாலே அவர்கள் பட்ட கஷ்டங்கள், சிரமங்கள், அவர்கள் எப்படி முன்னேற்றம் அடைந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்கள் அடைந்த முன்னேற்றங்களையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படி கொள்கையிலே தவக்கம் ஏற்பட்டது? அவர்களுக்கு முட்டுக்கட்டை எங்கேயெல்லாம் இருந்தது? என்பதையெல்லாம் பார்த்து நம் எதிரே உள்ள முட்டுக்கட்டையைத் தூக்கி எறிய வேண்டும். பாடுபட்ட அந்த நாட்டுன் கொள்கைகளை வைத்துக் கொண்டு நம் நாட்டுக்குத் தகுந்த முறையிலே ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு நம்முடைய நாட்டை முன்னேற்றப் பாதையிலே போவதற்கு முயற்சி எடுத்துக் கொள்பவர்கள் பின்னாலே திரும்பிப் பார்த்தால் அதற்கே நேரம் சரியாகப் போகும். நம் காரியத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரியத்திலேயே கண்ணாக இருக்க வேண்டும். மற்றெல்லாவற்றையும் மறக்காமல் இருக்க வேண்டும்.
இயற்கை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம்
நம் நாடு என்று சொன்னால்-நம் தேசம் என்று சொன்னால் வெறும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் கொண்டது மட்டும் நாடு இல்லை. கோவில்களும் கோபுரங்களும் அவைகளைக் கட்டிமுடித்த மக்களும் கொண்டதுதான் நம் நாடு. இந்த நாட்டுக்குச் சிறப்பு யார்? நம் மக்கள்தானே. வெறும் மரங்களும் மலைகளும் இருந்து மக்களே இல்லாத நாடு என்னவாகும்? நாட்டு மக்களை மறந்து விட்டு வெறும் இயற்கை அழகை மட்டும் பாடிக்கொண்டேயிருப்பார்கள் கவிஞர்கள். கவிஞர்களைக் கேட்டால் என்ன பாடுவார்கள்? காவிரியினுடைய வளத்தைப் பற்றியும் அதன் அழகைப் பற்றியும் பொன்னியின் தண்ணீர் வளத்திலே நாம் வாழ்வதைப் பற்றியும் கவி பாடு என்று சொன்னால் பாடிக்குவித்து விடுவார்கள். வேண்டியதுதான். இயற்கையினுடைய அழகைப் பாடவேண்டியதும் அவசியந்தான். அத்துடன் ஏழையின் கஷ்டத்தையும் பாட வேண்டும். இயற்கையினுடைய வளத்தையும் ஏழையையும் ஒன்றாக்ப் பண்ண வேண்டும். காவேரி ஓடுகிறது. தண்ணீர் வந்தால்தானே சாப்பாட்டுக்குவழி. அதனால், ஆறு வெட்ட வேண்டும். தண்ணீர் வரும்பொழுது அதைத் தேக்கி வைக்கவேண்டும். ஏதோ அணையைப் போட்டோம். வாய்க்கால் கட்டினோம். தண்ணீர் வந்தது. நெல் போட்டோம் சாப்பிடுகிறோம். அதனால், சந்தோஷம்தான். அது மாதிரி இயற்கை நமக்கு அளித்த அத்தனை வசதியையும் பயன்படுத்தவில்லையா என்ன? பயன்படுத்தத் தவறிவிட்டோம். எப்பொழுது தவறினோம். பழைய காலத்திலே அணை இருந்தது, சோர் காலத்திலே காவிரியிலே கல்லணை கட்டி வைத்தார்கள். அதனால்தான் அபற்கு கல்லணை என்று பெயர் வந்தது. பழைய ராஹாக்கள் காலத்திலேதான் கல்லணை கட்டப் பட்டது. இடைக்காலத்திலேதான் இதெல்லாம் விட்டுப் போய் விட்டது. நமக்குச் சொந்த அரசாங்கம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தோம். யார் இருந்தாலும் தெரியாது. ஒரே தடுமாற்றம். எங்கு போனாலும் தடுமாற்றம். இந்த தடுமாற்றம் ஒரு காலத்தில். அதற்குப் பிறகு அன்னிய அரசாங்கம் 150 ஆண்டுகள் இருந்தது. அந்த இடைக் காலத்தில்தான் நம் முன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விட்டது. இந்த 200-300 ஆண்டுகளில் உலகமே வெகு வேகமாக முன்னேறி விட்டது. உலகத்திலே ரயில், மின்சாரம், யந்திரங்கள் முதலியன விஞ்ஞான வளர்ச்சியில் இப்படித்தான் ஏற்பட்டது. இது 200 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது. அந்த காலத்தில் நமக்குச் சொந்த அரசாங்கம் இல்லை. அந்தக் காலத்தில் எதற்குச் சொந்த அரசாங்கம் இருந்ததோ அந்த தேசம் எல்லாம் முன்னேறி விட்டது. சொந்த அரசாங்கம் இல்லாத தேசம் எல்லாம் பின் தங்கி விட்டது பின் தங்கிய நாடு என்று சொல்லுகிறோம் இல்லையா? ஆப்பிரிக்கா, இலங்கை, மலேயா, இந்தியா என்று எல்லாம் கணக்குப் போடுகிறோம் இல்லையா? அந்த தேசம் எல்லாம் அப்படியே பின் தங்கிப் போய் விட்டன.மின்சாரம் உற்பத்தி செய்வோம்
மேலை நாட்டினர் மின்சாரத்தைப் பயன்படுத்தி யந்திரங்கள் செய்தார்கள். மின்சாரத்தைப் பயன்படுத்தினதால் தொழில் முன்னேற்றம் ஏராளமாக ஆகிவிட்டது. தொழில் முன்னேற்றம் ஏற்கட்டதனால் நாடு பொருளாதார முன்னேற்றம் அடைந்தது. ஆனால், நம் நாடு பின் தங்கிய நாடாக இருந்து. அப்பொழுது நமக்குத் தொழில் எல்லாம் பின் தங்கிப் போய்விட்டது. சுயராஜ்யம் வந்த பிறகுதான் நாம் முன்னேறியுள்ளோம். நாமும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது எப்படியென்று யோசித்தோம். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் ஏராளமான தொழில் வளர்ச்சி பெறலாம் என்று சொல்ல வேண்டியதில்லை. தொழில் வளம் பெருகும். மின்சாரத்தைப் பயன்படுத்தினால் மட்டும் போதுமா மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றால் மின்சார உற்பத்தி பண்ட வேண்டியிருக்கிறதில்லையா? மின்சார உற்பத்திக்கு எங்கே போகிறது. அதற்கு வேண்டிய இயற்கை வசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மின்சாரத்தையும் தண்ணீரிலிருந்துதான் உற்பத்தி பண்ணுகிறோம். காவேரித் தண்ணீர் வந்து எப்படி விவசாயத்திற்குக் கால்வாய் வெட்டி விவசாயம் பண்ணுறோமோ அது மாதிரி தொழில் நடத்த வேண்டும் என்று சொன்னால் மின்சாரத்தை உற்பத்தி பண்ண வேண்டும். மேட்டூரிலே ஏற்கனவே மின்சார உற்பத்தி இருக்கிறது. அது போதவில்லை. அதே போல இப்பொழுது உற்பத்தி பண்ணணும். ஒரு வருஷத்திலே 7 மாதத்திற்கு மேலே காவேரியிலே தண்ணீர் விடுறோம் இல்லையா. மீதி தண்ணீர் ஏன் வீணாகப் போகணும்? அதற்காக பழையபடி உயரத்திற்குக் கொண்டு வந்து அணைகட்டி, நீரைத் தேக்கி வைத்து, குழாய் மூலம் அதை அனுப்பி மின்சாரம் பண்ணுகிறோம். அதே மாதிரி பவானி ஆற்றிலேயும் குந்தா என்று ஒரு திட்டம் போட்டு இருக்கிறோம். நம்முடைய மதிப்பிற்குரிய தலைவர் நேருஜி அவர்கள் சென்ற மார்ச்சு மாதம் அதைத் திறந்து வைத்தார். இது ஒரு பெரிய திட்டம். இதைப்போல் பெரியாரில் ஒரு திட்டம். எத்தனையோ இடத்திலே திட்டம் போட்டும்கூட அத்தனையும் போதவில்லை. எவ்வளவு மின்சாரத் திட்டம் உற்பத்தி பண்ணியும்கூட மின்சாரத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது.இயற்கைத் தண்ணீரை வைத்துக்கொண்டு மின்சார உற்பத்திசெய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். ஏன் அப்படி இருக்கிறோம்? நமக்குத் தேவை அதிகரித்து வருகிறது. இப்பொழுது எதற்கெடுத்தாலும் மின்சாரம் கேட்கிறார்கள். விவசாயத்திற்கு மின்சாரம் கேட்கிறார்கள். மாடு கட்டி தண்ணீர் இறைத்தால் 1 ஏக்கர் தண்ணீர்தான் பாயும். பம்பு செட்டு வைத்தால் எவ்வளவு ஏக்கருக்கு வேண்டுமானாலும் பாய்ச்சலாம். 10-15 ஏக்கருக்குத் தண்ணீர் பாயும். தண்ணீர் இல்லை என்றால் ஆழமாக்க் கூட தண்ணீர் எடுக்கலாம். 150 அடிக்குக் கீழே இருந்துகூட தண்ணீர் எடுக்கலாம். அதையெல்லாம் மின்சாரத்தாலேதான் செய்ய முடியும். அதோடு மட்டுமல்ல. தொழில் செய்ய மின்சாரம் வேண்டியிருக்கிறது. பெரிய பெரிய தொழிற்சாலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது அல்லவா. அந்த மின்சாரத்தை வைத்துக் கொண்டுதானே தொழிற்சாலை ஏற்படுத்த முடியும். கிராமங்களுக்கெல்லாம் வெளிச்சம் வேண்டி இருக்கிறது, இதற்கெல்லாம் நாம் இப்பொழுது ஏற்படுத்தக்கூடிய மின்சார நிலையத்திலிருந்து போதவில்லை மின்சாரம். இன்னும் பிதிபாக மின்சார உற்பத்தி பண்ண வேண்டியிருக்கிறது. நெய்வேலியிலே உற்பத்தி பண்ணப் போகிறோம். மின்சார உற்பத்தியைப் பண்ணுவதன் மூலமாக மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ன? இவை எல்லாம் உற்பத்தியாகிற காலத்திற்குள் இன்னும் இரண்டு பங்கு தேவை அதிகமாகிவிடும். அதற்கு இது போல இரண்டு பங்கு மின்சாரம் தேவைப்படும். அப்புறம் புதிதாக எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிப்போம். நம் நாட்டிலே இதற்கு வரம்பு கிடையாது.
எதற்கு உச்சவரம்பு?
இப்போது உச்சவரம்பு போடுகிறோம் இல்லையா. அது மாதிரி வளர்ச்சிக்கு வரம்பு காட்ட முடியாது. வரம்பு கட்டவும் கூடாது. வளர்ச்சிக்கு வரம்பேகூடாது. எதுக்கு வரம்பு கட்டணும் தெரயுமா? மற்றவர்களை இல்லாதவர்களாக்கும் தனிப்பட்டவர்கள் வளர்ச்சிக்கு வரம்பு கட்டணும். சமுதாய வளர்ச்சிக்கு வரம்பு உண்டா என்ன? சமுதாய வளர்ச்சுக்கு எல்லா விதமான உதவியும் பண்ணி மேலும் மேலும் அது வளர்ச்சியடைவதற்கு உதவி செய்துகொண்டே போக வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு வேண்டிய உதவி பண்ணணும் என்று சொன்னால் தனிப்பட்டவர்களுடைய வளர்ச்சிக்கு ஒரு வரம்பு வேண்டும் இல்லையா. மற்றெல்லாத்தையும் ஒத்துக்கொள்வார்கள். விவசாயம் பண்றத்துக்காக காவேரிக்கு அணை போடணும். வாய்க்கால் வெட்டணும் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்லுவார்களா? அப்புறம் பணம் வரும் இல்லையா.அந்தப் பணத்தை என்ன பண்ணுவது? அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் கிடைத்தவரை எடுத்துக் கொடுத்துவிடு என்று சொல்லுகிறார்கள். அந்தப் பணத்தை யார்க்குக் கொடுக்கணும் என்கிறேன். இப்பொழுது வாய்க்கால் வெட்டினோம் என்றால், அதன் மூலமாகத் தண்ணீர் ஊர் முழுவதும் பரவுகிறது இல்லையா. அப்படி இல்லாமல் எங்க வீட்டுக்கு மட்டும் தண்ணீர் கொடு என்றால் நியாயமா என்ன? எனக்கு மட்டும் தண்ணீர் வருகிற மாதிரி பண்ணிக்கொடு என்றால் என்ன அர்த்தம்? அதிலே என்ன நியாயம் இருக்கிறது? உனக்கு மட்டும் வேண்டும் மற்றவர்களுக்கு வேண்டாமா என்ன? நீ எவ்வளவு நாளைக்குத் தண்ணீரைத் தேக்கி வைப்பாய்? அப்படித் தேக்கி வைத்தால் தான் நல்லா இருக்குமா? நாற்றமெடுத்துப் போகும். கெட்டுப் போகும். அப்புறம் நோய் வரும். கொசு வரும். வெள்ளம் வந்தால் ஆபத்து. எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய்விடும். அதனாலே தேக்கி வைத்தாலும் ஆபத்து. தேக்கி வைக்கா விட்டாலும் ஆபத்து. அதற்காக நாம் என்ன பண்ணுகிறோம்? அணையைப் போட்டு அங்கே வாய்க்கால் வெட்டி பாசன வசதி பண்ணிக் கொடுக்கிறோம். எல்லோருக்கும் வசதியாக பண்ணிக் கொடுக்கிறோம். எல்லோருக்கும் வசதியாக இருக்கத்தானே நீரைத் தேக்கி வைத்து அனுப்புகிறோம்? தண்ணீர் சுற்றிச்சுற்றி வர வேண்டியதுதான்.
பணத்தைத் தேக்கி வைக்காதே!
தண்ணீர் மழையாகப்பெய்யுது, ஆறாக ஓடுது. அதை அணைக் கட்டித்தேக்கிவைக்கிறோம். பிறகு வாய்க்கால் வெட்டி விவசாயத்திற்கு அனுப்புகிறோம். கொஞ்சம் தண்ணீர் சமுத்திரத்திற்குப் போகிறது. பிறகு என்ன ஆகிறது? இந்த மழை நீர் வற்றி மேகமாக மேலே போய் மறுபடியும் மழையாகக் கொட்டுகிறது. இப்படித்தானே அது பழையபடி சுற்றிக்கொண்டே வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியுமா என்ன? அதேபோல் தான் பணமும். சுத்தி சுத்தித்தான் வரணும். மழை இல்லையென்றால் நம் வாழ்க்கை நடக்காது. பறவைகள் வாழ முடியாது. மிருகங்கள் வாழ முடியாது. மழை இல்லையென்றால் யாரும் வாழ முடியாது. மழை இல்லையென்றால் யாரும் வாழ முடியாது. மனிதனுக்கும் மழை அவசியம். மிருகத்திற்கும் மழை அவசியம். பயிருக்கும் மழை அவசியம். மழை இருந்தால்தான் வாழ மிடியும். இல்லாவிட்டால் வறட்சி ஏற்பட்டுப்போகும் மழைக்கு அவ்வளவு பெருமை எப்படி ஏற்பட்டதோ அதே மாதிரிதான் பணத்திற்கும். மழையைப் போலத்தான் பணமும் சுத்தி சுத்தி வரவேண்டும். மழை எல்லா இடத்திலேயும் இருக்கிற மாதிரி எல்லா இடத்திலேயும் செல்வம் இருக்க வேண்டும். ஒருவர் மட்டும் சொந்தமாக உபயோக்ப்படுத்தக் கூடாது. சொந்தமாகப் பயன்படுத்தினால் அதற்குரிய செல்வாக்குப் போய்விடும் என்ற மாதிரி நிலைம் உண்டாக வேண்டும். “சரிதான் போ ஐயா உன் பணம் வேண்டாம்” என்று சொல்லுகிற நிலைமை வர வேண்டும். செல்வத்தைப் பெருக்கணும். அதோடு பலருக்கும் பயன்படுவதாக விநியோகம் பண்ண வேண்டும். நம்முடைய அரசாங்கத்துன் கொள்கை அதுதான். அந்தக் கொள்கையை நாம் ஒன்றும் புதிதாகப் பண்ணவில்லை. திடீரென்று சமதர்ம கொள்கை என்று சொல்லவில்லை.திடீர் திட்டமல்ல
திடீரென்று திட்டம் கொண்டுவரவில்லை. திட்டீரென்று 5 வருஷத் திட்டம் கொண்டு வரவில்லை. சிலர் நின்க்கிறார்கள். திடீரென்று சமதர்மத் திட்டம் கொண்டு வந்து விட்டார்கள் என்று. அதெல்லாம் ஒன்றும் கிடையாது. 1938-ம் வருஷத்திலே முதல் முதல் காங்கிரசில் திட்டக் கமிஷன் ஒன்று போட்டார்கள். அதற்கு நம்முடைய மதிப்பிற்குரிய பிரதம மந்திரி நேருஜி சேர்மனாக இருந்தார். பெரிய தொழில் நிபுணர்கள் பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் மெம்பர்களாக இருந்தார்கள். அப்புறம் யுத்தம் வந்து விட்டதனால் ஒன்றும் பண்ண முடியாது போய்விட்டது. ஏற்கனவே திட்டம் போட்டு ஆரம்பித்து விட்டோம். திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் கராச்சி காங்கிரசிலே சமதர்மக் கொள்கையை ஒத்துக்கொண்டோம். இதை யாரும் ஒத்துக்க கொள்வார்கள். கராச்சிக் காங்கிரஸ் தீர்மானத்தை புரட்டிப் டுரட்டிப் பாருங்கள். உங்கள் வீட்டிலே காங்கிரஸ் மெம்பர் யாராவது இருந்திருத்தால் அந்த ரசீதை எதுத்துப் பாருங்கள். அதில் இது மாதிரி கொள்கை இருக்கும். காங்கிரஸ் மெம்பராக்க் சேர்ந்தால் இதை எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஜாதி பேதம் கிடையாது. மத பேதம் கிடைதாது. வருவாய் இவ்வளவுதான் இருக்கணும். நிலம் இவ்வளவுதான் வைத்து இருக்க வேண்டும். ஜமீன்தார்கள் இப்படித்தான் இருக்கணும், என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. இல்லை என்று சொல்ல் முடியுமா? சொல்ல முடியாது. அதை வகுத்த பிறகு திட்டக் கமிஷன் போட்டிருக்கிறோம். இதை எல்லாம் திடீரென்று பண்ணவில்லை. முன் யோசனையோடுதான் பண்ணியிர்க்கிறோம். இது யாருக்குப் புதிதாகத் தோன்றும் என்று சொன்னால் சுயராஜ்யத்திலே நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் புதிதாகத்தெரியும். இப்பொழுது பிளானிங் கமிஷன்-திட்டக் கமிஷன் என்று பணம் கொடுத்து வைத்துருக்கிறோமே அதுமாதிரி நமக்கு சுயராஜ்யம் வந்த உடனே நாம் ராஜ்யத்தை எப்படி ஆளப்போகிறோம் என்று யோசனை பண்ண ஒரு கமிஷன் ஏற்படுத்தினோம். அதற்கு என்று திட்டம் போடாமலா இருப்போம்? திட்டம் போட்டுத்தான் பண்ண வேண்டும். ஏதோ சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று கத்தினார்கள். திடீரென்று சுயராஜ்யமும் வந்துட்டது என்று சொல்லுகிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தார். அந்த நினைப்பில்தான் நாமும் திராவிடம் திராவிடம் என்று கத்தினால் திராவிடம் திடீரென்று வந்துவிடும் வன்று மனப்பால் குடிக்கிறார்கள். அதனால் திராவிடம் வந்துவிடுமா என்ன? திராவிடம் எங்கே இருக்கிறது. அதை அவர்களால் அடைய முடியுமா? திராவிடர் என்று ஒரு நாடு இருக்கிறதா? எங்கே இருக்கிறது என்று நான் கேட்கிறேன். அது கற்பனையில் இருந்து உண்டானது. அந்தக் கற்பனையும் சொந்தச் சரக்கல்ல. அது எங்கே இருந்து வந்தது என்று சொன்னால் அது ஈரோட்டுப் பெரியார்கிட்டே இருந்து வந்தது. அவர்களுக்குச் சொந்த சரக்கே கிடையாது. இரவல் வாங்கினதுதான். எப்பவும் இரவல் வாக்குவதுதான் அவர்கள் வழக்கம். அதனாலே சுயராஜ்யம் திடீர்ன்னு சும்மா வந்துவிடவில்லை. ந்ல்ல முறையிலே அரும்பாடுபட்டு உதைபட்டு எத்தனையோ பேர் தூக்கில் தொங்கிமடிந்த பிறகுதானே சுயராஜ்யம் வந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.கற்படாவாதிகள்!
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் “அடைந்தால் திராவிடம் இல்லையெனில் சுடுகாடு” எதுக்காக சுடுகாட்டுக்குப் போக வேண்டும். கேட்கிறேன். நீ ஒன்றும் அப்படி சாக வேண்டாம். ஏன் சாகறே. இன்பத் திராவிடமே என்று பாடினால் திராவிடம் வந்து விடுமா என்ன? நாட்டிலே எல்லாம் என்ன இருக்கிறது? திராவிடம் என்று ஒரு நாடு கிடையாது. ஏண்டாசாகறே என்று கேட்டா நீங்க தேசீய கீதத்திலே திராவிடம் என்று பாடுகிறீர்களே என்று கேட்கிறான். தேசீய கீதத்திலே திராவிடம் மட்டுமா பாடுகிறோம். பஞ்சாப் சிந்து…….. என்று எல்லாம் பாடுகிறோம். பல்வேறு நாகரீகங்கள் நிறைந்த நாடு நம் நாடு. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு நாகரிகம் இருந்தது. அதற்கு திராவிட நாகரிகம் என்று பெயர். எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலே சரித்திரம் காண முடியாத நிலையிலே ஒரு எல்லையே வரையறுக்க முடியாத நிலையிலே இன்னும் அது இருக்கிறது. ஆராய்ச்சி எல்லாம் நடக்கிறது. அது எப்பொது வந்தது? ஆரிய நாகரிகம் திராவிட நாகரிகம் என்று அதைப்பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அது எப்பொது வந்தது? ஆரிய நாகரிகம் எப்பொழுது தமிழ் நாட்டுக்கு வந்தது? எப்படி வந்தது? அதுவும் ஒரு ஆராய்ச்சி. இப்படி பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அப்பால் முஸ்லீம்கள் வந்தார்கள். அப்புறம் கிறிஸ்தவர்கள் வந்தார்கள். அது மாதிரி பல்வேறு மதத்தினரும் வந்தார்கள். அது மாதிரி பல்வேறு மதத்தினரும் இந்த நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். பல்வேறு நாகரிகமும் நிறைந்தது நம் நாடு. உலகத்திலேயே நம் நாட்டிற்கு ஏன் பெருமை என்றால் பல்வேறு நாகரிகத்தையும் தன்னுடைய நாகரிகமாகக் கொண்ட பெருமைதான் நமக்கு. யார் வந்தாலும் நம்மவர்கள் ஆக்கப்படுகிறார்கள். நல்லவர்களை நம்மவர்களாக்குவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறேன். ஆக்கக் கூடாதா என்ன? நல்லவர்கள் எங்கே இருந்து வந்தாலும் யாராயிருந்தாலும் நம்மவர்களாக்கிக் கொள்வதுதான் நம் கொள்கை. ஏதோ முஸ்லீம்கள் சண்டை, சமணர்கள் சண்டை, சைவர்கள் சண்டை, எங்கேயோ நடந்திருக்கும் ஒரு ஓரத்திலே. அதைத்தான் இப்பொழுது பிரமாதப்படுத்துகிறார்கள். அது எப்பொழுதும் நடக்கும். இப்பொழுது கும்பகோணத்திலே இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒரு ஊரென்று இருந்தால் எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்களா என்ன? 4 பேர் ரவுடியாக இருப்பார்கள். 2 பேர் கள்ளச் சாராயம் காய்ச்சி இருப்பார்கள். 2 பேர் தப்பு பண்ணுகிறவர்களாக இருப்பார்கள். 2 பேர் தகராறு பண்ணுகிறவர்களாக இருப்பார்கள். இப்படி பலவிதமான ஆட்கள் இல்லாமலா இருப்பார்கள்? சண்டை இல்லாமலா இருக்கும்? பெரிய ஊரென்றால் அங்கே சண்டை போட்டுக்காமலா இருப்பார்கள்?ஏன் சும்மா இருந்தீர்கள்?
ஒரு பெரிய ஊரிலே போய்ப் பாருங்கள். நம்ம கோயில் இருக்கும். கொஞ்ச தூரத்திலே சர்ச் இருக்கும். மசூதி இருக்கும். இவை எல்லாம் என்ன பொய்த் தோற்றங்களா என்ன? இந்தக் கோபுரங்கள் எல்லாம் பொய்த்தோற்றமா? மசூதி பொய்த் தோற்றமா? இதையெல்லாம் இன்றைக்குக் கட்டிவிட முடியாது. இந்த சண்டை போடுகிறவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். சண்டை போடுகிறவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்; அவன் நாகரிகம் வேறு; நம் நாகரிகம் வேறு. இதுதான் திராவிட நாகரிகம் என்று பிரிக்க முடியுமா என்ன? திராவிட நாட்டைப் பிரித்துக் கொடு கொடு என்கிறீர்களே, எங்கேயிருந்து பிரித்துக் கொடுக்கிறது? திராவிட நாடு என்பது எது? நீங்கள் சொல்லுகிறீர்கள்; மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் இந்த பகுதிகளெல்லாம் சேர்ந்தது திராவிடம் என்று சொல்லுகிறீர்கள். வாஸ்தவம்; அதுதான் திராவிடம். ஒரு காலத்திலே நீங்களெல்லாம் ஒன்றாக இருந்தீர்களா? இல்லையா? இப்போது ஏன் பிரிஞ்சு போய் விட்டார்களே. மலையாளத்தார் திருவாங்கூர், கொச்சியோடு போய் விட்டார்கள். அப்பொழுது எல்லாம் நீங்க சும்மாதானே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்? போகிறவர்களை பிடித்து வைக்க முடியுமா, என்ன? போகிறவர்களுக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி, போய்விட்டு வா என்கிறோம். உங்களுக்கு திராவிடத்திலே நம்பிக்கையிருந்தால், நீங்க என்ன செய்திருக்கணும் அப்பா, நாமெல்லாம் ஒரே இனமாச்சே. நாம் ஏன் பிரிந்து போகவேண்டும்? ஒற்றுமையே வெற்றி தரும் என்பது உனக்குத் தெரியாதா? என்று காலைப்பிடித்து, கையைப் பிடித்து நாலு நல்ல வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருக்க வேண்டியதை விட்டுவிட்டு, இப்போஓது எதுத்ததற்கெல்லாம் என்னுடன் சண்டைக்கு வருகிறீர்களே, போராட்டம் செய்வோம் என்று சொல்கிறீர்களே. அப்பொழுது, எங்களைத் தடுத்து நிறுத்தியிருந்தால் போராடுவோம் என்று சொன்னாயா? திராவிடத்திலே நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? பட்டணத்திலே பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார். பட்டினி இருந்தார். நான் பிரிந்துதான் போவேன் என்ற உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்தார். அப்பொழுது நீ என்ன செய்திருக்க வேண்டும்? பிரியவே கூடாது என்று நீயும் எதிர்த்த வீட்டில் உட்கார்ந்து கொண்டே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்தாயா? இல்லையே.யார் சொல்லிக் கொடுத்தது?
இப்பொழுது மட்டும் திராவிடர் திராவிடம் என்று சொல்லிக்கொண்டு வருகிறாயே, திராவிடம் என்று யார் சொல்லிக் கொடுத்தது? பெரியார்தானே சொல்லிக் கொடுத்தார். பெரியார் ரொம்ப கெட்டிக்காரர். ரொம்ப சாமர்த்தியசாலி; ஆதலால், என்ன செய்தார்? அவர்க்குத் தெரியும்; திராவிட நாடு கிடைக்காதென்று, அதனால் திராவிட நாடும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். தமிழ் நாடே போதும் என்கிறார். அவர்க்குத் தைரியம் இர்க்கிறது. எதையும் சொல்வார்; எதையும் செய்வார். அவர் என்ன மக்களிடத்தில் போய் வோட் வாங்கப் போகிறாரா என்ன? யாரைக் கண்டு அவர் பயப்பட வேண்டும்? உனக்குத் தைரியம் இர்க்கிறதா? எங்கே இருக்கிறததென்று கேட்கிறேன். உனக்குக் கொள்கையிர்க்கிறதா? ஒரு திட்டமான கொள்கையும் இல்லை; ஒன்றுமில்லை; அதிலே நம்பிக்கையும் இல்லை. நீங்கள் இப்பொழுது ரொம்ப பலஹீனமாகப்போய்விட்டீர்கள். மறைக்க முடியுமா இதை? அந்த பலஹீனத்தை மறைப்பதற்காக திராவிட நாட்டை விட்டு விட்டு காங்கிரசை ஒழிப்பதுதான் வேலை என்று சொல்லுகிறார்கள். திராவிடத்துக்கு வேலை இல்லை. அதைப் பொட்டலம் கட்டி வைத்து விட்டார்கள் எவ்வளவு நாளைக்கித்தான் இந்த வேலை செய்வீர்கள். இதிலே காங்கிரசை ஒழிக்க வேண்டுமென்று யார் யாரிதமோ துணைக்குப் போகிறார்கள். கம்யூனிஸ்டுகள் இப்போது துணை கிடைத்திருக்கிறார்கள். புதுக் கூட்டாளிகள். கம்யூனிஸ்டுகள் திராவிட நாடு வாங்கித்தருகிறேன் என்று சொல்லுகிறார்களா? இல்லை. திராவிட நாடு என்று ஒத்துக்கொண்டார்களா? 1952-ம் வருஷத்திலே ஏதோ பெரியார் கொஞ்சம் ஆதரவு காட்டினார். பின்னாலே விட்டால் போதுமென்று கழன்று ஓடிவந்து விட்டாரே. அவருக்குத் தெரியும். கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் சாப்பிட்டு விடுவார்கள் என்று. நீ நினைக்கிறாய், சாப்பிட்டு விட்டால் அவன் வயிற்றுக்குள்ளே போய் அவன் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியில் வந்து விடலாமென்று அவன் உன்னை அப்படியே ஜீரணம் செய்து விடுவானே. உலகத்திலே கம்யூனிஸ்டுகளிடத்தில் மாட்டிக் கொண்டவக்கள் யாரும் மீண்டது கிடையாது. நீங்கள் திராவிடம் வேண்டுமென்று கேட்கிறீர்கள். அவன் இந்தியாவையும் சேர்த்து அகில அண்டம் வேண்டுமென்கிறான். எப்போது அவர்கள் மற்றவன் கொள்கையிலே சேர்ந்தார்கள்?ஊரை இரண்டாக்குபவர்கள் அறிஞர்களா?
இப்பொது சுதந்திரா பார்ட்டி யென்று ஒன்று வந்திருக்கிறது. நீங்கள் அதிலே ஒரு காலை வைக்கிறீர்கள்; இங்கே ஒரு காலை வைக்கிறீர்கள். இப்போது எங்கேயிருக்கிறீர்கள் என்பது தெரியவேயில்லை. கம்யீனிஸ்டுகள் கழுத்தைப் பிடித்து விட்டார்கள். இப்போது என்ன செய்வதென்று இரண்டு பேரும் தத்தளிக்கிறார்கள். யார் யாரை இணைப்பது? இப்போது சுதந்திரா பார்ட்டிக்காரர்கள் கையைக் கழுத்தில் போட்டுக்கொள்ளப் போகிறார்கள். எங்கே போக்ப் போகிறீர்கள்? எந்தப் பாதையில் போகப் போகிறீர்கள்? எந்தப் பாதையிலே போவதென்று தெரியாமல் விழிக்கிறீர்கள்? நாட்டிலே புதிதாக ஒரு பிரிவினையை உண்டாக்குகிறார்கள். நம்முடைய நாட்டிலே எத்தனையோ அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ காரியங்கள் செய்து கொண்டு வருகிறோம். ஒருவருக்கு ஒருவர் சண்டையை உண்டாக்குவது பெரிய காரியமல்ல, லேசாக உண்டாக்கி விடலாம். எல்லோரையும் ஒன்றாக்குவதுதான் பெரிய காரியம். இப்போது கும்பகோணம் நகரத்திலே ஒருவன் வந்து ஊரிலுள்ள சண்டைகளையும் தீர்த்து வைத்து எல்லோரையும் ஒன்றாக்கினால் நல்லது; அவனை எல்லோரும் நல்லவன் என்பீர்கள். அப்படியில்லாது ஊரை இரண்டாக்குகிறவனை நல்லவன் என்று சொல்வீர்களா என்ன? இப்போது ஊரை இரண்டாக்குகிறவர்களைத்தான் பார்த்தால் சிரிக்க மாட்டானா? உங்களுக்குத்தொந்தரவு கொடுக்கிறவர்களுக்கு அந்தப் பட்டமா. அதுகூட அவர்களுக்குப் புரிய மாட்டேன் என்கிறதே.நம்ப பழைய ஆட்கள்தான்!
சுதந்திரா பார்ட்டியில் யார்யார் இருக்கிறார்கள்? அவர்களும் நம்ப பழைய ஆட்கள்தான். ஏதோ ரத்தின சாமியைப் போன்ற பழைய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் இரண்டு பேர் இருப்பார்கள். இய்கேயாம் ஓடாமல் அங்கேயும் ஓடாமல் இருக்கிறார்களே, அவர்கள் நாலைந்து பேர் இருப்பார்கள். அவர்களுக்கு என் மேல்தான் கோபமே தவிர காங்கிரஸ் மேல்
அரிய படைப்பு. வாழ்த்துக்கள்
ReplyDelete