Monday, March 14, 2011

விருதுநகர் காமராஜர் வாழ்ந்த வீடு படங்கள்

விருதுநகர் காமராஜர் வாழ்ந்த வீடு படங்கள்-kamaraj virudhunagar house photos

விருதுநகரின் மைய பகுதியில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது காமராஜர் நினைவு இல்லம் . காமராஜரின் மறைவுக்கு பின்
இது நினைவு இல்லமாக அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. காமராஜரின் தாத்தா காலத்து வீடு இது. காமராஜர் இங்கு தான் பிறந்தார் என்று ஒரு
அறையை இங்கு காணலாம். ஆனால் காமராஜர் பிறந்தது இந்த வீட்டில் அல்ல , இரண்டு தெரு தள்ளி இருக்கும் மற்றொரு வீட்டில். அது
இப்போது யாருக்கோ சொந்தம். வரலாற்றில் ஒரு சின்ன பிழை. காமராஜர் சிறுவயது முதல் வாழ்ந்தது இந்த வீட்டில் தான். அவருடைய
வாழ்கையில் இந்த வீடு ஒரு முக்கிய இடம் பெற்று இருக்கிறது.
இந்த வீட்டில் கால் பதிக்கும் போது அவர் வாழ்ந்த வீட்டில் நாம் இப்போது
இருக்கிறோம் என்ற உணர்வு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். விருதுநகருக்குள் நுழையும் போதே பெரிய வழிகாட்டி போர்டு வைத்துள்ளனர்
ஆனால் காரில் உள்ளே செல்ல முடியாது. ஆட்டோ தான் சரி. வீட்டின் முன் சிறு கோயில் ஒன்று உள்ளது, கீழ் தளத்தில் ஒரு ஹால் , பெரிய சமையலறை, மற்றும் ஒரு ரூம், மாடிக்கு செல்ல பாதை ஹாலில் இருந்து செல்கிறது , கீழ் தளம் முழுவதும் டைல்ஸ் பதித்து , வூட் பாலீஸ் செயப்பட்டு இருப்பதால் அதன் பழமை முற்றிலும் அழிக்கப்பட்டு இருக்கிறது. மேல் தளத்தில் ஓரளவு பழமை மிஞ்சி இருக்கிறது.

மேல் தளத்தில் பெரிய ரூம் ஒன்று இருக்கிறது, கொஞ்சம் open space இருக்கிறது. காமராஜர் படித்த புத்தகங்கள் அங்கே காட்சிக்கு உள்ளன. பாதிக்கு மேல் ஆங்கில புத்தகங்கள். அவருடைய கதர் உடை மற்றும் ரசியா பயணத்துக்கு தைக்கப்பட்டு காமராஜர் போடாமல் ஒதுக்கிய கோட் சுட் ஒன்றும் உள்ளது.

அவருடைய மின்சார அடுப்பு, பயபடுத்திய சமையல் பத்திரங்கள் கூட காட்சிக்கு உள்ளன. அவர் பயன்படுத்திய முகசவரம் செட் ஒன்றும் காட்சிக்கு உள்ளது.
ஹாலில் காமராஜர் மார்பளவு சிலை ஒன்று உள்ளது. இந்த வீட்டை காமராஜர் போட்டோ gallery என்றே சொல்ல வேண்டும் அவ்வளவு அரிய புகைப்படங்கள் காட்சிக்கு உள்ளன.

இந்த வீட்டில் யார் யார் வாழ்ந்தார்கள் என்ற விபரமும் தருகிறேன்.

காமராஜருடைய தாயார் சிவகாமி அம்மாள் ,காமராஜரின் பாட்டி , காமராஜரின் தங்கை நாகம்மாள். நாகம்மாளுக்கு இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள். சிறுவயதிலேயே விதவை ஆகி விட்டதால் நாகம்மாள் தாய் வீட்டில்
தான் வாழ்ந்தார். அவர் பிள்ளைகளை வளர்த்தது காமராஜர் தான்.
நாகம்மாளின் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி பிள்ளைகள் பிறந்ததும் இந்த வீட்டில் தான். விருதுநகர் வழியே வந்தால்
கண்டிப்பாக இந்த நினைவு இல்லத்தை கண்டு செல்லுங்கள். படம் எடுக்க அனுமதி கிடையாது . கேமரா கொண்டு வந்தாலும் பலன் இல்லை.

wikimapiaவில் பார்க்க இங்கே click செய்யவும்

காமராஜர் நினைவு இல்லம் விருதுநகர்
satellite map



காமராஜரின் சட்டை


காமராஜரின் தங்கை நாகம்மாள்




தாயார் சிவகாமி அம்மாளுடன் காமராஜர்






காமராஜர் இறுதி ஊர்வலம்





காமராஜர் வாசித்த புத்தகங்கள்















இந்திரா காந்தி-சிவகாமி அம்மாள்-காமராஜர்





முகசவர பெட்டி






கயறு இழுக்கும் காமராஜ்


காமராஜர் குடும்பத்துக்கு அரசாங்கம் தந்த மாற்று வீடு

No comments:

Post a Comment