காமராஜ் கூறினார் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான
முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தனது மகளுடன் காமராஜரின் விருதுநகர் வீட்டிற்கு வந்திருந்தபோது எடுத்த படம்- இந்த படத்தில் பின்னணியில் நீங்கள் காண்பது தான் காமராஜரின் விருக்துநகர் வீட்டின் உண்மையான தோற்றம் . ஆனால் இப்போது இந்த பழமையான தோற்றத்தை நீங்கள் அந்த வீட்டில் பார்க்க முடியாது. இப்போது அது வூட் பாலிஸ் செய்யப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டு பகட்டாக தோற்றம் அளிக்கிறது.இப்படி பல தலைவர்கள் வந்தாலும் அந்த வீட்டில் ஒரு மின்விசிறி கூட அப்போது கிடையாது. இந்த படத்தில் காமராஜருக்கும் சாஸ்திரி அவர்களின் மகளுக்கும் நடுவே நிற்பது காமராஜரின் தங்கை மகன் ஜவகர் மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் - அவர் கையில் இருப்பது ஜவகரின் முதல் குழ்ந்தை சுலோச்சனா. ஜவகர் அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழ்ந்தை பிறந்த போது தான் சிவகாமி அம்மாள் அந்த வீட்டில் தன் பேரனுக்கு ஒரு மின்விசிறி கட்டாயம் வேண்டும் என்று முதன் முதலில் ஒரு மின்விசிறி மாட்டினார். மூன்றாவதாக பிறந்த அந்த பையனுக்கு காமராஜ் என்று பெயர் வைத்தனர். காமராஜ் என்ற பெயர் தமிழகம் முழுவதும் பலாயிரக்க்கணக்கில் எத்தனையோ குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டாலும் காமராஜர் குடும்பத்தில் இன்று வரை இரண்டு பேருக்கு மட்டும் தான் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த உன்னதமான பெயரை குழந்தைக்கு வைத்து எப்படி அழைப்பது? மரியாதை குறைவாக இருக்கும் அல்லவா?
இந்த பதிவில் kamaraj101.blogspot.com தளத்தில் வெளியான ஒரு கட்டுரையை சேர்க்க விரும்புகிறேன்
///////////// காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.
" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.
அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.
ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?
இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.
அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை.\\\\\\\\\\\\\\\\\
இந்திரா காந்தியுடன் காமராஜரின் தங்கை நாகம்மாள் மற்றும் அவரது மகன்கள் ஜவகர்-மோகன்
No comments:
Post a Comment